உடலை வலுப்பெற வைக்கும் நான்கு எளிய பயிற்சிகள்
இ ளம் வயதில் அழகிலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறையுடன் இருக்கும் பெண்கள் வேலை, திருமணம், குழந்தைப் பேறு போன்ற பலவற்றைக் காரணம் காட்...

வால் ஸ்குவாட் (Wall Squat)
சுவருக்கு முன் நேராக நிற்கவும். இரு கைகளையும் நீட்டவும். அப்படியே சாய்ந்த நிலையில் பாதி உட்காரும் நிலைக்கு வரவும். அதே நிலையில் பத்து எண்ணும் வரை நிற்கவும். பின் பழையபடியே நேராக நிற்கவும். இந்தப் பயிற்சியை நான்கு தடவை தினந்தோறும் செய்ய வேண்டும்.
பலன் : இந்தப் பயிற்சி செய்யும்போது முன் தொடை மற்றும் பின் தொடைகளில் உள்ள தசை நார்கள் வலுப்பெறும்.
இது மூன்று எலும்புகளுக்கான ஒரே பயிற்சி. அதாவது இடுப்பு, கால் மூட்டு மற்றும் கணுக்கால் எலும்புகள் இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் வலுப்படும். எலும்புகளின் உறுதி அதிகரிக்கும். பெண்கள் சிறு வயது முதல் இதைச் செய்துவந்தால் ஆஸ்டியோபோராஸில் பிரச்னை வராமல் காத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்குத் தொடை மற்றும் பின்புறம் பெரிதாக இருக்கும். அவர்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், தசைகள் இறுகி, நல்ல வடிவம் கிடைக்கும். மூன்று மாதத்தில் பலன் தெரியும்.
Post a Comment