வீட்டுக்குறிப்புக்கள், Non-veg டிப்ஸ்,
சிக்கன் 65, மாட்டான் சுக்கா சாஃப்டாக வர ஒரு முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு, உப்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்...

https://pettagum.blogspot.com/2011/06/non-veg.html
சிக்கன் 65, மாட்டான் சுக்கா சாஃப்டாக வர ஒரு முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு, உப்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கிக்கொண்டு அதில் சிக்கன் அல்லது மட்டனை ஊற வைத்து வறுத்தால் சாஃப்டாக இருக்கும்.
சிக்கன் லாலிபாப் அதிக ஸ்பைசியாக இருக்க இஞ்சி, பூண்டு, கரம், மசாலா, கொஞ்சம் பிரட் க்ரம்ஸ் கலந்து சிக்கனில் தடவி அரைமணி நேரமாவது ஊற வைத்து பிறகு ரெகுலர் மசாலாவுடன் கலந்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் ஸ்பைஸி சிக்கன் லாலி பாப் ரெடி.
இறால் மீனை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு, தலையைக் கிள்ளி எடுத்து விட்டு, இரண்டு கைகளாலும் தேய்த்தால் போதும் சுத்தமாகி விடும். அப்புறம் ஒரு பாத்திரத்தில் சூடு நீர் வைத்து அதில் பூண்டுத் தோலைப் போட்டு ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் இறாலை அலசி எடுத்தால் வாசம் இருக்காது.
சில நேரங்களில் மீன் சமைத்தால் டேஸ்ட் இல்லாமல் மண் போல் இருக்கும். ஆற்று மீன்களில் அது போன்ற ருசி சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. மீன் சமைப்பதற்கு முன்பு உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். பின்னர் வினிகர் சில சொட்டுக்கள் அல்லது எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் கலந்து சமைத்தால் மீன், கொழ கோழப்பு இன்றியும் ருசியாகவும் இருக்கும்.
சிக்கன் ரசம் செய்யும்போது ரசம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களை வருத்துப் பொடி செய்து பின் ரசம் வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளிக்க ரசம் சுவையாக இருக்கும்.
நண்டு சமையல் சுவையாக இருக்க மிளகாய்த்தூளுக்கு பதில் மிளகுப் பொடி சேர்த்தால். ரொம்ப சுவைகாய இருக்கும்.
உப்புக் கண்டம் போடும்போது கறியை கழுவித் துடைத்துவிட்டு, உப்பு, தேங்காய் எண்ணெயை மஞ்சள்தூள் கலந்து பிசறி வெயிலில் காயவைக்க, பச்சை நாற்றம் போய்விடும்
மட்டன் செய்யும் போது மசாலா பொருட்களை தயிருடன் கலந்து நெஞ்சுக் கறியுடன் பிசறி இரண்டு மணிநேரம் ஊற வைத்த பின் சமைக்க நெஞ்சுக்கறி சீக்கிரம் வேகும். கறியும் மிருதுவாக இருக்கும்.
சிக்கன் கிரேவியை மணக்க மணக்க செய்ய, சாதாரணமாக மசாலா பொருட்களை வறுக்காமல் சமைத்து செய்யாமல், மசாலாப் பொருட்களை நன்றாக வறுத்து, பொடி செய்து அந்த பவுடரில் சிக்கன் கிரேவி தயாரித்தால் வாசனை கமகமவென்று இருக்கும்.
மீன் வறுக்கும்போது ஒட்டாமல் வர லெமன் அதிகம் சேர்க்கக் கூடாது.
Post a Comment