சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்! எ ரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புஉணர்வு வாகனத் தொடக்க விழா...

சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

ரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புஉணர்வு வாகனத் தொடக்க விழா, சில நாள்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், எரிவாயுவைச் சிக்கனமாகச் செலவழித்து சமைப்பதற்குப் பெண்களுக்குப் பயிற்சி தரப் போவதாக அறிவித்திருந்தார்கள். அதற்கு முன்னால், இல்லத்தரசியும் சமையல் கலை நிபுணருமான அன்னம் அவர்கள், சமையல் எரிவாயுவை எப்படியெல்லாம் சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்று டிப்ஸ் தருகிறார்.
 

1. நம்ம பாட்டிகள் காலத்திலிருந்து சமையலை சீக்கிரம் முடிக்க ஃபாலோ செய்கிற டிப்ஸ் இது. சமைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அரிசியையும் பருப்பையும் ஊற வைத்து விடுங்கள். சீக்கிரம் வேகும், சமையல் எரிவாயுவும் மிச்சமாகும்.

2. அரிசி, பருப்பு, மட்டன், சிக்கன், பல காய் குழம்பு, இட்லி, பொங்கல், கடலைக்குழம்பு என்று எந்தெந்த சமையலுக்கெல்லாம் பிரஷர் குக்கரைப் பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் குக்கரைப் பயன்படுத்துங்கள். பாத்திரத்தைவிட இதில் உணவுப்பொருள்கள் சீக்கிரம் வேகும். கேஸ் மிச்சமாகும்.

3. பொரிக்க வேண்டிய உணவுகளை, மசாலாவில் புரட்டியெடுத்து உடனே பொரிப்பதைவிட, மசாலாவில் நன்கு ஊற வைத்துப் பொரித்தால், சட்டென்று வேகும். கேஸ் மிச்சமாகும்.



4. வதக்கும்போதே பாதி வெந்துவிடுகிற காய்கறிகளை, மூடிப் போட்டு வேக வைத்தால் அந்த ஆவியிலேயே முழுதாக வெந்துவிடும். பாகற்காய் போல கொஞ்ச நேரம் வேக வைக்க வேண்டிய காய்கறிகள் என்றால், அளவாகத் தண்ணீர் வைத்து, மூடி விடுங்கள். அளவுக்கு அதிகமான தண்ணீர் வைத்தால், காய் வெந்த பின்னும் அதில் இருக்கிற தண்ணீர் வற்றும் வரை சமையல் எரிவாயுவைச் செலவழிக்க வேண்டி வரும்.

5. பாத்திரங்களில் துளிகூட ஈரமில்லாமல் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு அடுப்பில் ஏற்றினால், சட்டென்று சூடாகும். தினசரி இப்படிச் செய்யும்போது, இதிலும் சிறிதளவு கேஸ் மிச்சமாகும்.



6. சமைப்பதற்கு முன்னால் தாளிக்கும் சாமானிலிருந்து நறுக்கிய காய்கறிகள்வரை பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு சமையுங்கள். அடுப்பில் வாணலியை வைத்துவிட்டு, வதக்குவதற்கு வெங்காயத்தை நறுக்க ஆரம்பிக்காதீர்கள்.

7. சமைக்கிற பொருளின் அளவுக்கு ஏற்றபடி, பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள். சிறிதளவு சமைக்க பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அது சூடாக நேரம் பிடிக்கும். இதனாலும் கேஸ் வீணாகும்.
8. நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றைத் தண்ணீர் கொதித்த பிறகு போட்டு, மூடி போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். சாதத்தை வடித்துத்தான் சாப்பிடுவீர்கள் என்றால், உலை தண்ணீரை அளவாக வைத்து மூடி விடுங்கள். சீக்கிரம் உலை கொதித்து, அரிசியும் சீக்கிரம் வேகும்.



9. பால் காய்ச்ச, கேஸ் ஸ்டவுக்குப் பதில் கெட்டிலைப் பயன்படுத்தலாம். சமைத்ததை மறுபடியும் சூடு செய்ய கேஸ் ஸ்டவ்வைப் பயன்படுத்துவதைவிட, இன்டக்‌ஷனில் செய்தால் சமையல் கேஸை மிச்சம் பிடிக்கலாம்.

10. ஃபிரிட்ஜில் வைத்த பாலை காய்ச்சுவதற்கு முன்னால், ஃபிரிட்ஜில் இருக்கிற மாவில் இட்லி ஊற்றுவதற்கு முன்னால், அவற்றை 2 மணி நேரத்துக்கு முன்னரே வெளியில் எடுத்து வைத்துவிட்டால், சமைப்பதற்கு அதிகமாக கேஸ் செலவழியாது. ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே சமைத்தால் ஜில்னெஸ் போகிற வரைக்கும் சூடு செய்ய வேண்டி வரும்.

Related

சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் 8331858303524076626

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item