மெமரி பத்தாது மக்களே!

மெமரி பத்தாது மக்களே! கார்க்கிபவா உ ங்கள் மொபைலின் மெமரி எவ்வளவு? `16 ஜிபி...

மெமரி பத்தாது மக்களே!
கார்க்கிபவாங்கள் மொபைலின் மெமரி எவ்வளவு? `16 ஜிபி ப்ரோ' என கெத்து காட்டுபவர்கள், அடுத்த மொபைல் வாங்கும் முன்னர் கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள். காரணம், 16 ஜிபி எல்லாம் இனி பத்தாது ட்யூட்ஸ்.

உலகம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட்போனுக்குள் மறைந்துவருகிறது. இன்னும் விரைவாக, எளிதாக, ஜாலியாக நம் அன்றாடத் தேவைகளை மொபைல் வழியே முடித்துத் தர, எல்லா நாட்டு ஆட்களும் ஓவர்டைம் வேலைபார்க்கிறார்கள். ஒரு ஐடியா பிடித்து இந்த ஆண்டு தெறிக்கவிட்டால், அடுத்த ஆண்டே ‘அதுக்கும் மேல' என அதிரடி அப்டேட்களுடன் வருகிறார்கள். 2015-ம் ஆண்டில் மெள்ள தலையெடுத் திருக்கும் `ஆப்’களுக்கு, 2016-ம் ஆண்டில் ஹிட் அடிக்கும் யோகம் பளிச் பளிச். அதைவிட சோஷியல் மீடியாவில் நடைபெறப்போகும் மாற்றங்கள்தான் அதிரடி கவனத்தை ஈர்க்கின்றன.
இன்ஸ்டன்ட் அப்டேட்ஸ்!

ஃபேஸ்புக்கின் ‘இன்ஸ்டன்ட் ஆர்ட்டிக்கிள்ஸ்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செய்தி நிறுவனங்கள், தங்களது கன்டென்ட்டை இனி ஃபேஸ்புக் மூலமே வாசகர்களிடம் கொண்டு சேர்க்கலாம். தனி பிரவுஸரில் பார்க்க ஆகும் நேரத்தைவிட இங்கே குறைவாகவே ஆகும். துல்லியமான படங்கள், எழுதியவரின் `வாய்ஸ் நோட்’, வீடியோ, நடுநடுவே விளம்பரங்கள் என, முழுப் பத்திரிகையையும் ஃபேஸ்புக்கின் உள்ளேயே புதைக்கப்போகிறார்கள். ஏற்கெனவே ‘கார்டியன்’, `வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பிரபல செய்தி நிறுவனங்கள் இதற்கு ‘ஓ.கே’ சொல்லிவிட்டன.

ஒன் க்ளிக் ஷாப்பிங்!
படங்கள் பார்ப்பது, வாசிப்பது, பதில் அளிப்பது என எல்லாமே ஒரே இடத்தில் செய்ய முடியும்போது ஷாப்பிங் செய்ய மட்டும் தனியே ஒரு ஆப் வேண்டுமா? இனி `ஒன் க்ளிக் ஷாப்பிங்’ தான். நீங்கள் ட்விட்டரில் அலைபாயும்போது ஒரு விளம்பர ட்வீட் வருகிறது. அதை வாங்க நினைத்து க்ளிக் செய்தால், தனியாக இன்னொரு ஆப் திறக்காது. ட்விட்டரில் இருந்தே ஒன் க்ளிக் பட்டன் மூலம் வாங்க முடியும். இந்த பட்டனை எந்த சோஷியல் மீடியாவிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

பெரிஸ்கோப் (Periscope)

இது ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப். இதன் நிறுவனர்கள் இஸ்தான்புல் நகரத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு இருக்கும் டாக்சிம் சதுக்கம் தாக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிய ட்விட்டரை எட்டிப் பார்த்தவருக்கு எல்லாமே எழுத்துக்கள் மூலமான தகவல்களாகவே கிடைத்தன. நடக்கும் விஷயங்களை ‘லைவாக’ப் பார்க்க எந்த வசதியும் அப்போது இல்லை என மூளைக்குள் ஃப்ளாஷ் அடித்திருக்கிறது. நாடு திரும்பியதும் உடனே ஒரு `வீடியோ ஆப்' உருவாக்க முன்வந்தார். ஆப் தயாரான ஒரே வருடத்தில் ட்விட்டர், பெரிஸ்கோப்பை பல மில்லியன் டாலர் கொட்டி வாங்கிக்கொண்டது. ட்விட்டருக்கு ஒரு வீடியோ பிளாட்ஃபார்ம் வேண்டும் என்பதாலும், பெரிஸ்கோப் தனக்கே ஒரு எதிரியாக வளரக்கூடும் என்பதாலும்தான் பெரிஸ்கோப்பை உடனடியாக வாங்கியது ட்விட்டர்.
ரிஸ்கோப்பில் குட்மார்னிங்கில் தொடங்கி டின்னர் மெனு வரை எல்லாவற்றையும் வீடியோ மூலமே ஷேர் செய்யலாம். பெங்களூர் டிராஃபிக் போலீஸ் ஏற்கெனவே பெரிஸ்கோப்புக்கு ‘ரெட் கார்பெட்’ விரித்திருக்கிறது. பெங்களூரு நகரில் யாராவது டிராஃபிக் ரூல்ஸை மீறினால், அதை மொபைலில் இருந்தே வீடியோ எடுத்து, புகார் தெரிவிக்க வழி செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்துவது பெரிஸ்கோப் ஆப்-பைதான்.

தொடங்கிய சில மாதங்களிலேயே ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பெரிஸ்கோப்பை  டௌன்லோடு செய்தார்கள்.

ஸ்னாப்சாட்  (Snapchat)

`லிவ் தி மொமன்ட்' என்பதுதான் இன்றைய இளசுகளின் வாழ்க்கை லட்சியம். நீங்கள் வாழும் நொடியைப் பதிவுசெய்ய, அட்டகாசமான ஒரு  வாய்ப்பைத் தருகிறது ஸ்னாப்சாட் மொபைல் அப்ளிக்கேஷன். பார்ட்டிக்கோ, நிகழ்ச்சிக்கோ சென்றால், அங்கே நடந்த கலாட்டாக்களை அடுத்த நாள் வந்து ஒரு கதையாகச் சொல்வோம் இல்லையா? `சம்பவம் நடக்கும்போதே இன்ஸ்டன்ட்டாகச் சொல்லலாம்’ என்கிறது ஸ்னாப்சாட். அங்கே நடக்கும் கலாட்டாக்களை உடனுக்குடன் படம், வீடியோக்களாகச் சேர்த்து அதன் மேல் குறிப்புகள் எழுதி ஷேர் செய்யலாம். நீங்கள் அனுப்பும் படங்கள், வீடியோக்கள் நீங்கள் சொல்லும் நேரம் வரை மட்டுமே சர்வரில் இருக்கும். அதன் பின்னர் தாமாக டெலிட் ஆகிவிடும். மற்ற ஆப்களுக்கும் ஸ்னாப் சாட்டுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இது.
கோலிவுட் பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மல்லுக்கட்ட `ஹாய் ட்யூட்... கம் டு ஸ்னாப்சாட்’ என எல்லோரையும் இழுத்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. `இந்தப் புள்ள பல்லு விளக்கினாக்கூட ஸ்னாப்சாட்ல போடுதுப்பா’ என ஆர்யாவும் ரசிகர்களை வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். காரணம், நம் ஸ்னாப்சாட்களை யார் யார் பார்க்கலாம் என நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும். ஹன்சிகா பல் தேய்ப்பது ஆர்யாவுக்கு மட்டுமே தெரியலாம்!

10 கோடிக்கும் மேற்பட்ட மொபைல்களில் ஸ்னாப்சாட் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த வருடம் அது 30 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

ரெடிட்  (Reddit)

அள்ள அள்ளக் குறையாத அன்லிமிட்டெட் டேட்டா கிடங்குதான் ரெடிட்.காம். ரிஜிஸ்டர் செய்த யூஸர்கள், தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பில் ஒரு `சப் ரெடிட்’-ஐ தொடங்கலாம். அதன் சுவாரஸ்யம், நம்பகத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் படிப்பவர்கள் அதற்கு வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் அந்த `சப் ரெடிட்’-ஐ வெப்சைட்டின் முதல் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ இடம்பிடிக்க உதவும். நல்ல விஷயம் என்றால், முதல் பக்கத்துக்கு வந்து நிறையப் பேரின் லைக்ஸ் பெறும்.
தனிநபர் விஷயங்களுக்கு அதிக இடம் தராமல், சுவாரஸ்ய கன்டென்ட்டை நம்பி இயங்குவதால் ரெடிட்டுக்கு அட்டகாச வரவேற்பு கிடைத்திருக்கிறது. நமக்குப் பிடித்த தலைப்புகளை மட்டும் சப்ஸ்க்ரைப் செய்துகொண்டால், அதில் புதுப் பதிவுகள் வரும்போது நம் மெயிலுக்கே `சார்... போஸ்ட்’ என வந்துவிடும். கூடவே, பிடித்த எழுத்தாளர்களை ஃபாலோ செய்யவும் முடியும். எல்லாமே எழுத்தாக இருப்பது இல்லை. படங்களைத் தொகுத்து ஸ்லைட்ஷோ மூலமாகவும் படைப்புகளைக் கொடுக்கலாம். எதைப் பற்றி தேடினாலும் சரியான தகவலைக் கொடுக்கும் ‘குட்டி கூகுளாக’ மெருகேறிவருகிறது ரெடிட்.காம்.

ஒவ்வொரு மாதமும் 20 கோடிப் பேர் ரெடிட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் டாப் வெப்சைட் அலெக்ஸா பட்டியலில் 31-வது இடத்தில் இருக்கிறது ரெடிட். கொஞ்சம் கொஞ்சமாக உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் ரெடிட், 2016-ம் ஆண்டில் ஒரு எங்கேஜிங் சோஷியல் மீடியாவாகக் கலக்கும்!

Related

கணிணிக்குறிப்புக்கள் 2094594067781563748

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item