சில சமையலறை டிப்ஸ்கள்! வீட்டுக்குறிப்புக்கள்,

சில சமையலறை டிப்ஸ்கள்! முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது...

சில சமையலறை டிப்ஸ்கள்! முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே .... 1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம். 2. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும். 3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும். 4. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும். 5. மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும். 6. பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும். 7. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம். 8. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது. 9. ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம். 10. வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம். 11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும். 12. வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி. 13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 14. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும். 15. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும். 16. சுண்டல் முதலிய அயிட்டங்கள் செய்ய பட்டாணி, கொண்டக்கடலை, மொச்சை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றாமல் கடலை வகைகளை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பக்கத்தில் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க வையுங்கள். வறுத்த கடலையில் கொதிக்கும் நீரை விட்டு வழக்கம்போல குக்கரில் வேக வைத்தால், நன்கு வெந்துவிடும்.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 6309155818466807329

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item