உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-நெல்லிக்காய் சூப்
நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரைய...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_289.html
நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.
நெல்லிக்காய் சூப்
தேவை
நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு
செய்முறை
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
------------------------------------------------------------------------
Post a Comment