முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

  ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns) Grammar Patterns 1 If you would like to learn English you should practice the Grammar notes da...

 


ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns)

Grammar Patterns 1

If you would like to learn English you should practice the Grammar notes daily, until you can recall them instantly.

If you are through with the Grammar you can pick up the English Conversation daily read this note with the Tamil sentences.

Practice the following Grammar Patterns Daily.

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இணையத்தின் ஊடாகக் கற்றுக்கொடுக்கப்படும்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" என்பதை தமிழில் மொழி பெயர்ப்போமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால், அது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் சரியாக விளங்கிக் கற்பதற்கு இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

சரி பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துள்ளோம். இந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. I do a Job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய் முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் செய்ய வேண்டும் ஒரு வேலை. (அழுத்தம்)
33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)
35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn’t do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது ஒரு வேலை பிரயோசனமானது.

51. Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52. It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53. I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54. I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55. I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56. To do a job I am going to USA.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் USA க்கு


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.


58. Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?


59. Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.


60. I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61. I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62. I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63. I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.


64. I have been doing a job.
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்திருக்கிறேன் ஒரு வேலை.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்திருந்தேன் ஒரு வேலை

66. I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67. I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68. I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69. I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.


70. If I do a job I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71. If I don't do a job I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.

72. If I had done a job I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.
 
 
கவனத்திற்கு:F
ree online Spoken English in Tamil
உதாரணமாக மேலே நாம் கற்றப் பாடத்தில் "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என்று வந்துள்ளதை அவதானியுங்கள். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:
speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.
Homework:
Learning Spoken English in Tamil Pls visit aangilam.com
கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அவை மிக எளிதாக உங்கள் மனதில் பதிந்துவிடும்.
1. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகின்றேன் ஒரு கடிதம்.
3. I listen to News
நான் செவிமடுக்கின்றேன் செய்திகளுக்கு.
4. I fill up the form.
நான் நிரப்புகின்றேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கின்றேன் வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு புத்தகம்.
8. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகின்றேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகின்றேன் உந்துருளி.
கவனிக்கவும்
உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை:
I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.
I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் . . .
என நாம் மேலே கற்றதைப் போன்று அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்ய வேண்டும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.
Long Forms = Sort Forms
Do + not = Don’t
Does + not = Doesn’t
Did + not = Didn’t
Will + not = Won’t
Was + not = Wasn’t
Were + not = Weren’t
Can + not = Can’t
Could + not = Couldn’t
Have + not = Haven’t
Has + not = Hasn’t
Had + not = Hadn’t
Need + not = Needn’t
Must + not = Mustn’t
Should + not = Shouldn’t
Would + not Wouldn't
இப்பாடத்துடன் தொடர்புடை இரண்டு கிரமர் பெட்டன்களின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயிற்சிச் செய்துக்கொள்ளுங்கள்
மற்றும் இன்றையப் பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் அதே இலக்க வரிசைக் கிரமத்தில் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுப் பற்றியும் இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். பிழையற்ற உச்சரிப்பிற்கு பாடங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.
இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர மேலும் சில கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

"பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப்பட்டுள்ளதே தவிர, உலகில் எந்த ஓர் மொழியும் இலக்கணக் கூறுகளை வகுத்துவிட்டு மக்களின் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை."

இக்கூற்று உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை. சத்தமாகப் பேசுங்கள்.

மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்பதற்கானப் பயிற்சி முறையாகும்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி 
 
Thanks to:- அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun welc

Related

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! 33045648521815994

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item