3 நாள் வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை எடுங்க.. கொரோனாவுக்கு இதுதான் மருந்து- தமிழக அரசு !!!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவதற்கு தமிழ...
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. ஆயுஷ் அமைச்சகம் மத்திய ஆயுர்வேதா யோகா நேச்சுரோபதி யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் ஆயுஷ் இதுபற்றி ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அப்போதே சில ஊடகங்கள் இது தொடர்பான உண்மை அறியும் பரிசோதனை நடத்தினர். இதில் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற இந்த மருந்து, கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹோமியோபதி சாத்தியமா ஹோமியோபதி சாத்தியமா இது மட்டும் அல்ல, எந்த ஒரு ஹோமியோபதி மருந்தும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் இந்த மருந்தை, கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு கொடுப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
தமிழக டயட் ஆயுஷ் அமைச்சகம் இது போன்ற ஒரு முடிவு எடுத்திருந்தாலும் கூட, தமிழக அரசு ஏற்கனவே சிறப்பான சிகிச்சை முறைகளை கொடுத்து வருவதால், இது கூடுதலாக பலனளிக்கக் கூடும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தமிழக அரசு சிறப்பான, மருத்துவ சிகிச்சை, மற்றும் டயட் உணவுகள் மூலம், கொரோனா இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி நோய் எதிர்ப்பு சக்தி இந்த நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரை கூடுதலாக சில நன்மைகளை பயக்குமே தவிர, நோயை முற்றிலும் குணப்படுத்திவிடும் என்பதற்கான, ஆதாரங்கள் இல்லை. தமிழக அரசு கூறியது போல இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். நோயை குணப்படுத்துவதற்கான எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment