#மௌனம் ... !!! இந்த நாள் இனிய நாள், !
#மௌனம் ... !!! பேசுபவன் விதைக்கிறான் பேசாதவன் அறுவடை செய்கிறான் ... நன்றும் தீதும் நாவினுள் அடக்கம் ... நாவின் பெருமையோ மௌனத்தின் தொ...

#மௌனம் ... !!!
பேசுபவன் விதைக்கிறான்
பேசாதவன் அறுவடை செய்கிறான் ...
நன்றும் தீதும்
நாவினுள் அடக்கம் ...
நாவின் பெருமையோ
மௌனத்தின் தொடக்கம் !!!
மௌன மூச்சே
இறைவனின் பேச்சு ...
பேசிப் பேசி சாதித்தது என்ன ???
பேசாமல் சாதிப்போமே !!!
அறிவு விழித்தால்
ஆற்றல் பெருகும் ...
ஆற்றல் பெருகினால்
வாழ்கையில் அமைதி கிட்டும் ...
அமைதி கிட்டினால்
ஆனந்தம் பெருகும் ...
ஆனந்தம் பெருகினால்
அருள் நிறைந்திடும் ...
அருள் நிறைந்தால்
அன்பு பெருகிடும் ...
அன்பு பெருகினால்
ஆணவம் அழிந்திடும் ...
ஆணவம் அழிந்தால்
இறை உணர்வு சித்திக்கும் ...
இறை உணர்வு சித்தித்தால்
பிறவி பயணம் அறுபடும் ...
பிறவி பயணம் அறுபட்டால்
பிறப்பின் நோக்கம் நிறைவுறும் ...!!!!
Post a Comment