முட்டை ரோஸ்ட்! ஆரோக்கிய உணவுகள் !!
முட்டை ரோஸ்ட் தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை - 3 பெரிய வெங்காயம் - 3 தக்காளி - ஒன்று கரம் மசாலா- அரை தேக்கரண்டி கொத்தமல்லி தூள்...

தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 3
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
கரம் மசாலா- அரை தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்- முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இந்துப்பு - முக்கால் தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
1. வெங்காயத்தையும் தக்காளியையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். 2. வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
3. நன்கு சுருண்டு வரும்போது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். 4.அரை தம்ளர் நீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும்.
5. பின்பு வேகவைத்த முட்டையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். மசாலா முட்டையுடன் நன்கு கலந்து வந்தபின் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.
Post a Comment