ஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை!
ஆ டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான ‘பரண்மேல் ஆடு வளர்ப்புமுறை’ தற்போது தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. ஆடு வளர்ப்பில் இறங்...

அலைந்து திரிவது ஆடுகளின் இயல்பு. அவற்றின் ஆரோக்கியத்துக்கு மேய்ச்சல் அவசியம். இதனால், பரண்மேல் ஆடு வளர்ப்புமுறையை மேற்கொண்டாலும், ஆடுகள் காலார நடக்கும் வகையில் மேய்ச்சல் நிலமும் கொஞ்சம் இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி கொடுக்காய்ப்புளி, கருவேல், கிளுவை போன்ற மரங்களை வளர்த்துவந்தால், ஆடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைப்பதோடு, நிழலும் கிடைக்கும். கொட்டில் குளுமையாக இருந்தால், ஆடுகள் சுறுசுறுப்பாகவும் பொலிவாகவும் இருக்கும்.
ஆட்டுப்புழுக்கை தடை இல்லாமல் கீழே விழ, இந்த அளவு இடைவெளி போதுமானது. இடைவெளி அதிகமானால், ஆட்டின் கால்கள் பலகைகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும். புழுக்கை மற்றும் சிறுநீர் ஆகியவை உடனடியாகக் கீழே சென்று விடுவதால், பரணின் தரைப்பகுதி எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும். மரப்பலகையிலான பரண் 3 ஆண்டுகள்வரை பலன் கொடுக்கும். பிளாஸ்டிக் பரண் 10 ஆண்டுகள்வரை பயன்படும்” என்ற ஜெகதீசன் நிறைவாக,
“பரண்மேல் ஆடு வளர்ப்புமுறை, அதிக மழைப்பொழிவுள்ள பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு மிகவும் ஏற்றது. மற்ற மாவட்டங்களில் முடிந்தவரைத் தரைக் கொட்டகையையே பயன்படுத்தலாம். பணவசதி உள்ளவர்கள் பரண்மேல் ஆடு வளர்ப்பைச் சில நன்மைகள் கருதி மேற்கொள்ளலாம். ஆடு வளர்ப்பில் லாபம் என்பது குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளைப்பெற்று வளர்த்தெடுத்து, விற்பனை செய்வதைப் பொறுத்துதான் அமைகிறது. லாபம் கொட்டகையைப் பொறுத்து அமைவதில்லை. ஆடுகளுக்கு மேய்ச்சல் அவசியம். ஆரோக்கியமான ஆடுகள்தான் அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்து, அதற்குத் தகுந்தவாறு கொட்டகை அல்லது பரண்களை அமைத்து ஆடு வளர்ப்பில் இறங்க வேண்டும்” என்றார்.
தொடர்புக்கு:
முனைவர் கி.ஜெகதீசன்
உதவிப் பேராசிரியர் விலங்கின
மரபணுவியல் மற்றும்
இனவிருத்தியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614625.
செல்போன்: 95660 82013
- கொட்டகையை நீளவாக்கில் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும்.
- 1 கிடா ஆட்டுக்கு 20 சதுரஅடி என்ற அளவிலும், 1 பெட்டை ஆட்டுக்கு 10 சதுரஅடி என்ற அளவிலும், 1 குட்டிக்கு 5 சதுரஅடி அளவிலும் இடமிருக்க வேண்டும்.
- கொட்டகையின் அகலம் 25-30 அடிவரை மட்டுமே இருக்க வேண்டும். அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 110 ஆடுகளுக்கு 48 X 25 (நீளம் X அகலம்) என்ற அளவில் கொட்டகை அமைக்கலாம்.
- 100 பெட்டை ஆடுகளுக்கு 1,000 சதுரஅடி பரப்பு, 10 கிடாக்களுக்கு 200 சதுரஅடி பரப்பு என மொத்தம் 1,200 சதுர அடி இடம் தேவை.
- 1,200 சதுர அடியிலான கொட்டகையில் 3 அறைகள் இருக்குமாறு கம்பிவலைத்தடுப்புகளை அமைக்க வேண்டும். 10 கிடாக்களுக்கு 200 சதுர அடியில் ஓர் அறையும், 100 பெட்டை ஆடுகளுக்குத் தலா 500 சதுர அடியில் இரண்டு அறைகளும் அமைக்க வேண்டும்.
- பரண் தரையிலிருந்து 6 முதல் 8 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.
- கொட்டகையின் முன்புறத்தில் ஆடுகள் வெயிலில் உலவுவதற் கான திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த திறந்தவெளி பரப்பு, கொட்டகையின் மொத்தப் பரப்பளவைப்போல் 2 மடங்கு இருக்க வேண்டும். இந்த இடத்தில் நிழல் தரும் தீவன மரங்களை வளர்க்கலாம்.
- ஐந்து ஆடுகளுக்குப் பசுந்தீவனம் சாகுபடி செய்ய 10 சென்ட் நிலம் தேவை. அதேகணக்கில் 110 ஆடுகளுக்கு 220 சென்ட் (2.2 ஏக்கர்) நிலம் தேவை. பசுந்தீவனச் சாகுபடி நிலத்தில் 50 சதவிகிதப்பரப்பில் கோ-4 போன்ற புற்களையும், 25 சதவிகிதப் பரப்பில் காராமணி போன்ற பயறு வகைகளையும், 25 சதவிகிதப் பரப்பில் வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 போன்றவற்றையும் பயிரிடலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகேயுள்ள கம்மாளம்பூண்டியில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார், சுப்பையா. பரண்முறை ஆடு வளர்ப்பு குறித்துப் பேசிய சுப்பையா, “நான் 500 ஆடுகளுக்கு மேல வளர்க்கிறேன். போயர், தலைச்சேரி ஆடுகள்தான் அதிகம். கொஞ்சம் செம்மறியாடுகளும் இருக்கு. எல்லா ஆடுகளையும் பரண்லதான் அடைக்கிறேன். பரணை இரும்பால் அமைச்சிருக்கேன். தரைத்தளத்தைத் தைல மர ரீப்பர்களை வைத்து அமைச்சிருக்கேன்.
இரும்பு அமைச்சதுக்குக் காரணம், எப்போ வேணாலும் அதைப் பழைய இரும்பா விற்பனை செஞ்சுடலாம். நாம் பண்ணை அமைக்கிற இடத்தைச் சுத்திக் கிடைக்கிற பொருள்களை வெச்சே கொட்டகை அமைக்கணும். பனைமரங்கள், பனையோலை, தென்னையோலைனு பயன்படுத்தினா செலவு குறையும். பரணா இருந்தாலும் சரி, தரையில கொட்டகை அமைச்சாலும் சரி... ஆடுகளுக்கு மேய்ச்சல் அவசியம். பரண் அமைக்க, எவ்வளவுக்கெவ்வளவு செலவைக் குறைக்க முடியும்னு பார்த்துக் குறைவான செலவில்தான் அமைக்கணும். அப்போதான் சீக்கிரம் லாபம் பார்க்க முடியும்” என்றார் உற்சாகத்துடன்.
தொடர்புக்கு, சுப்பையா, செல்போன்: 98843 01017
Post a Comment