பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

ஓய்வுபெற்ற எனக்கு, பி.எஃப்மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு நான் வரி கட்ட வேண்டுமா? ரூ.40,000 வரிவிலக்கு எனக்குப் பொருந்துமா? சிஏ.ஜி.என்.ஜ...

ஓய்வுபெற்ற எனக்கு, பி.எஃப்மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு நான் வரி கட்ட வேண்டுமா? ரூ.40,000 வரிவிலக்கு எனக்குப் பொருந்துமா?
சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர் 

‘‘இ.பி.எஃப்.ஓ மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு வரி கட்ட வேண்டும். ஏனெனில், இது சம்பளம் என்னும் வருமானத் தலைப்பிற்குள் அடங்கும். மேலும், இதற்கு வருமான வரிப் பிரிவு 16-ன்கீழ், நிலைக் கழிவாக ஆண்டுக்கு ரூ.40,000 வரை சலுகை அளிக்கப் படுகிறது. அன்கம்யூட்டட் (Uncommuted) முறையில் ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்துக்கு வரி உண்டு.
கம்யூட்டட்(Commuted) முறையில் ஒரே தவணை யாகப் பெறும் ஓய்வூதியத்துக்கு அரசு ஊழியர்களுக்கு முழு வருமான வரி விலக் கும், தனியார் ஊழியர் களுக்குப் பகுதி வரி விலக்கும் (Partial Exemption) அளிக்கப்பட்டுள்ளது.’’

என் வயது 79. எனது நீண்ட கால, குறுகிய கால ஆதாயங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் வரி செலுத்துவதற்கான வரம்பிற்கு உட்பட்டே இருக்கிறது. என்றாலும், இந்த ஆதாயங்களுக்காக நான் வரி செலுத்த வேண்டுமா?

என்.பி. இசை அழகன், ஆடிட்டர்

‘‘உங்கள் வயது 60-க்கு மேல் இருப்பதால், ரூ.3 லட்சம் வரை வருமான வரிவிலக்கு உள்ளது. உங்கள் வருமானம் வரி வரம்புக்குக் கீழே இருப்பதால், நீங்கள் வருமான வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை.’’

என் வயது 65. மகனுடன் வசித்துவருவதால், எனது வீட்டை விற்க முடிவெடுத்துள்ளேன். அதை விற்றால் கிடைக்கக்கூடிய 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, மாதமொன்றுக்குக் குறைந்தது ரூ.35,000 வரை வருமானம் ஈட்ட விரும்புகிறேன். அதற்கேற்ற முதலீட்டு ஆலோசனை கூறவும்.


த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்
‘‘உங்களுக்குத் தேவைப்படும் வருமானம், மாதம் 35,000 ரூபாய் எனில், ஆண்டுக்கு 4,20,000 ரூபாய். 50 லட்சம் ரூபாய் முதலீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் பெற 8.4% வருமானம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால், ஓராண்டு முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.35,000 பெறலாம். ஆண்டுக்கு 12% வரை வருமானம் வர வாய்ப்புள்ள இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 50 லட்சம் ரூபாயை இரண்டாகப் பிரித்து முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி & டெட் ஃபண்ட் மற்றும் எல் அண்டு டி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.’’

2017-18-ம் நிதியாண்டில் சொத்தை விற்றது மூலம் 80 லட்சம் ரூபாயை மூலதன ஆதாயமாகப் பெற்றுள்ளேன். அதே ஆண்டில், மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்குப் பெற ரூ.50 லட்சத்தை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்துள்ளேன். மீதி்முள்ள 30 லட்சம் ரூபாயை, இப்போது இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘வரி விலக்குக்காக இரண்டு முறை க்ளெய்ம் செய்ய முடியாது. எனவே, 50 லட்சம் ரூபாய் மட்டுமே வரி விலக்குக்கு ஏற்கப்படும். மீதமுள்ள 30 லட்சம் ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.’’

நான் வீடு வாங்கவுள்ள லே-அவுட்டுக்கு அருகிலுள்ள சாலையின் ஓரத்தில் ‘AF’ என்று எழுதிய அளவைக் கற்கள் ஆங்காங்கே நடப் பட்டுள்ளன. அது விமானப்படைக்குச் சொந்தமாக அகலப்படுத்தப்படவுள்ள சாலை என்று கூறுகிறார்கள். இதுகுறித்த விவரத்தை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?
த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

‘‘நீங்கள் வீடு வாங்கவுள்ள பகுதியின் கிராம நிர்வாக அலுவலரை அணுகி விசாரிக்கலாம். அவரிடம் இதுகுறித்த தகவல்கள் இருக்கும். ஒருவேளை, இதுகுறித்த சரியான விவரம் அவரிடம் இல்லையென்றால், நகர் திட்டமிடல் அலுவலர் (Town planning officer) அல்லது நில அளவையாளர்மூலம் அதுகுறித்த விவரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.’’

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கமுடியுமா? ஏதேனும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும்போது க்ளெய்ம் செய்யலாமா?


பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
‘‘வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். இந்தியாவில் சிகிச்சை எடுத்தால் மட்டுமே இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளெய்ம் செய்ய முடியும். அதேபோல், இந்தியர் அல்லாதவராக இருந்தாலும், முறையான பணி அனுமதியுடன், இந்திய ரூபாயில் சம்பளம் பெறுபவராக இருந்தால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க அனுமதியுண்டு.’’

எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ரிலையன்ஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், மிர்ரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்டுகள் ஒவ்வொன்றிலும் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறேன். இது சரியா?

அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்

‘‘உங்களின் போர்ட்ஃபோலி யோவைப் பார்க்கும்போது, நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாள ராகத் தெரிகிறீர்கள். குறுகிய காலத்தில் இந்த முதலீட்டில் பெரிய பலனை எதிர்பார்க்க இயலாது. 7-10 ஆண்டுகள் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் தொடர்வதாக இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.’’

இந்துக் குடும்பத்தில் இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டா?

என்.ரமேஷ், வழக்கறிஞர்

‘‘இந்து சட்டப்படி, இரண்டாம் திருமணம் என்பது சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம். ஆனால், அந்தத் திருமணத்தின் காரணமாகப் பிறக்கும் குழந்தைகள் சட்டப் படியான வாரிசுகள்தான். எனவே, இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டு.’’
Courtesy: vikatan.con/nanayamvikatan


Related

ஃபண்ட் முதலீடுகள் 4829940307579563112

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item