``இதைச் செய்தால் வருமானவரி ரீஃபண்ட்!" - இப்படி எஸ்.எம்.எஸ் வந்தால்... #Alert மக்களே

``இதைச் செய்தால் வருமானவரி ரீஃபண்ட்!" - இப்படி எஸ்.எம்.எஸ் வந்தால்... #Alert மக்களே   இன்று இந்தியா முழுவதும் பல பணப் பரிவ...

``இதைச் செய்தால் வருமானவரி ரீஃபண்ட்!" - இப்படி எஸ்.எம்.எஸ் வந்தால்... #Alert மக்களே

 
இன்று இந்தியா முழுவதும் பல பணப் பரிவர்த்தனைகள் மொபைலில்தான் நடக்கின்றன. அனைத்து விஷயங்களும் நமக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலமே தெரிவிக்கப்படுகின்றன. அப்படி வருமான வரித்துறை எச்சரிக்கை செய்த எஸ்.எம்.எஸ் மோசடி ஒன்றைப் பற்றி பார்ப்போம். இந்த மோசடியில் வருமான வரித்துறை அனுப்புவதுபோல மக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகின்றன. அதில் நீங்கள் அதிகமாகச் செலுத்திய வரியை ரீஃபன்ட் செய்ய வேண்டும், அதற்குக் கொடுக்கப்பட்ட லிங்க்கில் கிளிக் செய்து வங்கிக் கணக்கின் தகவல்களைக் கொடுக்குமாறு கேட்கும். இதன்மூலம் பலரின் தகவல்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது வருமான வரித்துறை.

 சில நேரங்களில் தவறான ஒரு அக்கௌன்ட் நம்பரைக் குறிப்பிட்டு அந்தக் கணக்குக்குத் தொகையை ரீஃபன்ட் செய்வதாக கூறப்படும். அக்கௌன்ட் நம்பர் தவறென்றால் கொடுக்கப்பட்ட லிங்க்கை கிளிக் செய்து சரியான தகவல்களைக் கொடுக்குமாறு எஸ்.எம்.எஸ் வரும். நாமும் பதறிப் போய் தகவல்களைக் கொடுத்துவிடுவோம். இப்படி டெபிட் கார்டு தகவல்கள் பல நேரங்களில் பெறப்படுகிறதாம்.

கிளிக் செய்தால் வரும் இணையதளமும் அப்படியே உண்மையான இணையதளம் போன்றே இருக்கும். இப்படி வந்த எஸ்.எம்.எஸ் லிங்க்கில் SBI தளம்போல் அப்படியே இருப்பதாக ட்விட்டரில் ஒருவர் தெரிவித்தார். இதைப் போன்ற டிஜிட்டல் மோசடிகளை 'Phishing' என்று அழைப்பர். இந்த எச்சரிக்கையை சில மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை விடுத்திருந்தாலும் நிதியாண்டு தொடக்கமான இந்த ஏப்ரலில்தான் இது நிகழ அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால் உஷாராக இருங்க மக்களே!
வருமான வரித்துறை எச்சரிக்கை

இந்த டிஜிட்டல் யுகத்தில் நிதி சார்ந்த விஷயங்கள் எந்த அளவுக்கு எளிமையாகியிருக்கிறதோ, அதே அளவு ஆபத்தாகவும் ஆகியிருக்கிறது. அதனால் பயனாளர்களான நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கிகள் தொடங்கி வருமான வரித்துறை வரை கூறுவது ஒன்றைத்தான். டெபிட் கார்டு தகவல் கேட்டு யாரும் போன் செய்யவோ, எஸ்.எம்.எஸ் செய்யவோ மாட்டோம் என்பதுதான் அது, இதைப் புரிந்துகொண்டாலே இதைப் போன்ற மோசடிகளில் இருந்து பெரும்பாலும் தப்பித்துவிட முடியும்.

Related

வருமான வரி 4722692764581556568

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item