இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்!
இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்! ‘வ ருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதும், வரிச் சலு...
இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்!
அதிகாரியின் முடிவு...
சம்பளதாரர்களின் வருமான வரியைக் கணக்கிட, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய சுற்றறிக்கையை சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரி களுக்கு அனுப்பி நடப்பாண்டில் தனது பிடியை இறுக்கியிருக்கிறது வருமான வரித் துறை. அதாவது, சம்பளம் வழங்கும் அதிகாரி, சம்பளதாரர் வரிச் சலுகை கோரும் இனங்களில், அதற்கான தகவல் மற்றும் விவரங்களைப் பெற்று, தனக்கு திருப்தி ஏற்பட்டால் வரிச் சலுகையை அனுமதிக்கலாம். தரப்பட்ட விவரம் / தகவல் திருப்திகரமாக இல்லையெனில், சம்பளதாரர் கோரும் வரிச் சலுகையை, சம்பளம் தரும் அதிகாரி அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.
வரி கணக்கு தாக்கலின்போது வரிச் சலுகைக்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து சலுகை மற்றும் வரித் தள்ளுபடி பெற்றுக்கொள்ளட்டும் என்பது சென்ற ஆண்டுவரை இருந்த சுற்றறிக்கை. இப்போது அதில் மாற்றம் வந்துள்ளதற்குக் காரணம், புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள பிரிவு 192 (2D) மற்றும் புதிய விதி 26C-யின்படி சம்பளதாரர், படிவம் 12BB-யில் தனது பெயர் மற்றும் பான் எண் விவரங்களுடன், தனது வரிச் சலுகைக்கான விவரங்களை குறிப்பிட்டு, ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களை இணைத்து, சம்பளம் தரும் அதிகாரியிடம் சமர்ப்பித்து வரிச் சலுகை பெற வேண்டும்.
மூன்று வகை சம்பளம்...
சம்பளதாரர்கள் என்பது பென்ஷன்தாரர் களையும் குறிக்கும். அது மட்டுமல்ல, சம்பளம் என்பது மூன்று உள்பிரிவுகளைக் கொண்டது. 1. மாதாந்திர சம்பளம், கட்டணம் (பீஸ்), கமிஷன், பென்ஷன். 2. நிறுவனம் தரும் வீடு, வாகனம் போன்ற வாழ்க்கை வசதிகள். 3. சம்பளத்துக்குப் பதிலாக தரப்படும் ஒட்டு மொத்தத் தொகை. அதாவது, வேலைஇழப்பு. வேலையில் சேரும்போதோ, வேலை முடிவுற்ற பிறகோ தரப்படும் ஒட்டுமொத்தத் தொகை முதலானவை.
இதர வருமானம்
இதர வருமானம் என்பது வீட்டுச் சொத்து வருமானம், (வீடு, நிலம் போன்றவற்றால் கிடைக்கும் வாடகை வருமானம்), வங்கி முதலானவற்றின் டெபாசிட்டுகள் மூலம் வரும் வட்டி வருமானம், குடும்ப பென்ஷன் வருமானம் போன்றவை இதர வருமானம் ஆகும்.
சம்பள வருமானங்களை சம்பளம் தரும் அதிகாரியே கணக்கிட்டுச் சரிபார்த்துக்கொள்ள முடியும். ஆனால், இதர வருமான விவரங்களை, சம்பளதாரர் குறிப்பிட்டு, ‘மேற்கண்ட அனைத்தும் எனது தகவல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படை யில் உண்மையானவை’ எனச் சான்றொப்பம் தர வேண்டும். மேற்கண்டவற்றில் விடுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது வருமானத்தைக் குறைத்துக் காண்பித்ததாகக் கருதப்பட்டு, நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதேபோல், சம்பளம் வழங்கும் அதிகாரி, சம்பளதாரரிடமிருந்து வரிச் சலுகைக்கு உரிய படிவம் 12BB மற்றும் அதற்கான ஆவண ஆதாரம் பெறாமலும், இதர வருமானம் பற்றிய உறுதி மொழிப் படிவம் பெறாமலும் வரியைக் கணக்கிட்டு, வரிச் சலுகை பெற அனுமதித்திருந்தால், அவரும் நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்.
முரண்பாடு
தற்போதைய நிலவரப்படி, வரி கணக்கு தாக்கலின்போது சம்பளதாரர் சமர்ப்பித்த தகவலுக்கும், சம்பளம் வழங்கிய அதிகாரி பதிவு செய்த தகவலுக்கும் இடையே வேறுபாடு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அப்படி வேறுபாடு உள்ள வரிக் கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 2 கோடி எனக் கூறப்படுகிறது. எனவே, நடப்பு ஆண்டு விதிமுறையை முறையாகப் பயன்படுத்தி வரிச் சலுகை பெறலாம். வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வராமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
- ப.முகைதீன் சேக்தாவூது
சிறப்புச் சலுகைகள்!
நடப்பு நிதியாண்டில் பலவிதமான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்ன சலுகை என்று பார்ப்போம்.
* ரூ40,000 நிலைக்கழிவு (Standard deduction) சம்பளதாரர் மற்றும் பென்ஷன்தாரர் ஆகிய இருவருக்கும் பொதுவானது. ஒரே நிதியாண்டில், ஒருவர் சம்பளத்தை வேலை செய்த அதிகாரி யிடமும், பென்ஷனை நேரடியாக கருவூலத்திலோ வங்கியிலோ பெறக்கூடும். என்றாலும், நிலைக்கழிவு ரூ.40,000 மட்டுமே.
* ஒருவர் ஒரே நிதியாண்டில் சம்பளம், பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் ஆகிய மூன்றையும் பெறக்கூடும். அத்தகைய சம்பளதாரர், குடும்ப பென்ஷனுக்கான நிலைக்கழிவு ரூ.15,000-ஆகப் பெற்றுக்கொள்ளலாம், இது மற்றொரு நிலைக்கழிவு.
* மேற்கண்ட சம்பளதாரர் வீட்டுச் சொத்து வருமானமும் பெறக்கூடும். அத்தகையோருக்கு வாடகை வருமானத்தில் 30% நிலைக்கழிவும் உண்டு. இந்த மூன்று நிலைக்கழிவுகளையும் ஒரு வரே பெற்றுக்கொள்ளலாம். வரிச் சலுகை பெறலாம்.
* மூத்தக் குடிமக்களுக்கு சேமிப்புக் கணக்குக்கான வட்டி வருமானத்தில் ரூ.50,000 வரை வருமான விலக்குப் பெற புதிய பிரிவு 80TTB நடைமுறைக்கு வந்துள்ளது.
Post a Comment