பரம்பரைச்சொத்தை விற்க நினைக்கிறேன். அந்த விற்பனைக்கு வரிப் பிடித்தம் இருக்குமா? வரிச்சலுகை உண்டா?
பரம்பரைச் சொத்தாக எனது தாத்தாவிடமிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு ஒரு சொத்து கிடைத்தது. தற்போது எனக்கு 70 வயதான நிலையில், அந்தச் சொ...

மகேஷ், அறந்தாங்கி
எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்
“பொதுவாக, வரிப் பிடித்தம் என்பது சம்பளம், வாடகை, ஒப்பந்த வரவு செலவுகள், வட்டி, கமிஷன் போன்ற வகைகளுக்குத் தான் இருந்துவந்தது. ஆனால், 1.6.2013-க்குப் பிறகு ஒருவர், மற்றொருவரிடமிருந்து, ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேலுள்ள அசையாச் சொத்தை வாங்கும்போது அதற்கான வரிப் பிடித்தமாக வாங்கும் தொகையில் ஒரு சதவிகிதத்தை வரிப் பிடித்தம் செய்து, மீதித் தொகையைத்தான் விற்பவருக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வரிப் பிடித்தம் செய்த தொகையை, சொத்தை வாங்குபவர், விற்பவரின் பான் நம்பரைக் கொண்டு செலுத்திவிட வேண்டும். செலுத்தியபிறகு அதற்கான சான்றிதழையும் விற்பவருக்கு வழங்க வேண்டும். விற்பவர், அந்த வருட வருமான வரித் தாக்கல் செய்யும்போது, வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, தான் கட்டவேண்டிய வருமான வரியில் கழித்துக்கொள்ளலாம். அல்லது மீதமிருந்தால் ரீஃபண்டும் வாங்கிக்கொள்ளலாம். 70 வயது என்பதற்காக வருமானவரிப் பிடித்தத்தில் எந்தவிதமான சலுகையும் கிடையாது. ஆனால், விற்கப்படும் சொத்து விவசாய நிலமாக இருக்கும் பட்சத்தில் இந்த வரிப் பிடித்தத்தில் விலக்கு உண்டு.”
Post a Comment