கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை!
கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை தேவையானவை: கேழ்வரகு சேமியா - ஒரு கப் கொள்ளு மாவு - அரை கப் கடலைப்பருப்பு - அரை கப் வெங்காயம் - ஒன்று...

தேவையானவை:
கேழ்வரகு சேமியா - ஒரு கப்
கொள்ளு மாவு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
செய்முறை:
கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி.
குறிப்பு: இஞ்சி - பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம்.
Thanks to vikatan.com
Post a Comment