சமையல் அரிச்சுவடி! கிச்சன் கைடு!!
கிச்சன் கைடு! க த்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு சுவையும்...

கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு சுவையும் கூடும்.
ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால், வித்தியாசமான கொழுக்கட்டை தயார்.
முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்.
இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்கிறீர்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
Post a Comment