கருப்பட்டி காபி
சளி , இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி சளி , இருமல் , தொண்டைப்புண் , தொண்டை கரகரப்பு , தொண்டைக்கட்டு போன்ற பி...

பொடி செய்ய தேவையான பொருட்கள்: சுக்கு தூள் - 1/2 கப் மல்லி - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பொடி செய்ய தேவையான பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சுவையான கருப்பட்டி காபி தயார்.
தேவைப்பட்டவர்கள் இதனுடன் பால் சேர்த்து பருகலாம். பனிக்காலத்தில் ஏற்படும் சளிக்கு நல்ல மருந்தாகவும் இந்த கருப்பட்டி காபி பயன்படும்.
கருப்பட்டி- 50கிராம்
பால்- தேவையான அளவு
செய்முறை
கருப்பட்டியை ஒன்றிரண்டாக உடைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்து கருப்பட்டி கரைந்ததும் அடுப்பை அணைத்து அப்படியே மூடி வைக்கவும். 5நிமிடம் கழித்து கருப்பட்டி நீரை வடிகட்டவும்.
பாலில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி இனிப்புக்கு தேவையான அளவு கருப்பட்டி நீர் கலந்து பருகவும்.
Post a Comment