இந்த 5 மொபைல் ஆப்ஸ் உங்கள் காலையை பவர்ஃபுல் ஆக்கும்!
அலுவலகம் செல்பவர்களுக்கு ஞாயிறுக்கிழமை மாலையிலிருந்தே, திங்கட்கிழமையின் பரபரப்பு தொடங்கிவிடும். அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் செல்வதில்...

Sleep as Android:
இரவில் நிம்மதியாக உறங்கி காலையில் சீக்கிரம் எழுந்தாலே, பாதி பதற்றம் குறைந்து விடும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் 'Sleep as Android' அப்ளிகேஷன் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் நீங்கள் உறங்குகிறீர்கள் என்பதை பதிவு செய்வதில் இருந்து, தூக்கத்தின் போது உங்கள் குறட்டை சத்தத்தை பதிவு செய்வதுவரை இந்த அப்ளிகேஷன் ஒரு ஸ்மார்ட் ட்ராக்கராக செயல்படுகிறது. இனிமையான ஒலிகள் மூலம் உறங்குவதற்கும், காலை படுக்கையிலிருந்து எழவும் இது உதவுகிறது. நாளடைவில் சரியான நேரத்திற்கு உறங்கி, காலையில் சீக்கிரம் எழ இந்த அப்ளிகேஷன் நம்மைப் பழக்குகிறது. சிம்பிளான கணக்கிற்கான விடையளிப்பது, QR கோடை ஸ்கேன் செய்வது, உறங்காத செம்மறி ஆட்டை கண்டுபிடிப்பது போன்ற சின்னச்சின்ன ஆப்ஷன்கள் மூலமே இதன் ஸ்மார்ட் அலாரமை ஆஃப் செய்ய முடியும். உறக்கத்தில் இருந்து விடுபட இந்த ஸ்மார்ட் ஆப்ஷன்கள் உங்களுக்கு உதவும்.
டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.urbandroid.sleep&hl=en
7 Minute Workout :
அலுவலகம் செல்லும் அவசரத்திலும், நேரமின்மை காரணமாகவும் காலையில் உடற்பயிற்சி செய்வதைப் பலரும் 'ஸ்கிப்' செய்வார்கள். ஜிம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய வெறும் 7 நிமிடங்கள் போதும் என்பதுதான் '7 Minute Workout' அப்ளிகேஷனின் கான்சப்ட். உடல் எடையைக் குறைக்க, உடலினை உறுதியாக வைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷனில் பலவிதப் பயிற்சிகள் பற்றிய விவரங்களும், வீடியோக்களும் உள்ளன. உடற்பயிற்சி செய்ய தினமும் நினைவூட்டுவதுடன், நாம் தினமும் தவறாது உடற்பயிற்சி செய்கிறோமா இல்லையா என்பதையும் இது ட்ராக் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே போதும் என்பதால், அலுவலகம் செல்பவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் இந்த அப்ளிகேஷன் பெரும் உதவிகரமாக உள்ளது.
டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.popularapp.sevenmins&hl=en
Any.do:
அலுவலகம் சென்றதும் அந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் மறக்காமல் இருக்க, ஓர் அப்ளிகேஷன் உங்களுக்கு அனைத்தையும் நினைவூட்டினால் நன்றாக இருக்கும் அல்லவா! 'Any.do: To-do list & Reminders' அப்ளிகேஷன் இதற்கு உதவுகிறது. முக்கியமான மெயில் அனுப்புவது, அலுவலகம் தொடர்பான கால் செய்வது என அனைத்து விஷயங்களையும் இதன் மூலம் சரியான நேரத்துக்கு நினைவூட்டிக் கொள்ளலாம். இதன் சிக்கல் இல்லாத சிம்பிளான வடிவமைப்பும், ஆப்ஷன்களும் சில நொடிகளில் ரிமைன்ட்டர்களை சேர்க்க உதவுகின்றன. ஒரு நாளில் செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் இதன் மூலம் நாம் நினைவூட்டிக்கொள்ள முடியும். இதுவரை 15 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.anydo&hl=en
Tamil Flash News :
வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் நேரத்துக்குள், உலகில் நடந்த அத்தனை முக்கியமான செய்திகளையும் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் அரசியல், சினிமா, விளையாட்டு என அத்தனை முக்கியமான செய்திகளைச் சுருக்கமாகவும், அதே நேரத்தில் முழுமையாகவும் தெரிந்துகொள்ள முடியும். 'ஸ்வைப்' செய்வதன் மூலம் அடுத்த செய்தியைப் படிக்க முடிவதும், நண்பர்களுடன் செய்தியை எளிமையாகப் பகிர முடிவதும் ப்ளஸ் பாய்ன்ட்கள். 2ஜி நெட்வொர்க்கிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பான வடிவமைப்புக்காக, ஃபேஸ்புக் இதனை 'FbStart' அப்ளிகேஷன்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியிருக்கிறது.
டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.tamilflashnews&hl=en
Google Traffic :
ட்ராஃபிக் ஜாமில் சிக்கிக்கொள்ளாமல் அலுவலகம் சென்று திரும்புவதே ஒவ்வொருவருக்கும் மிகவும் சவாலான காரியம் தான். சில நேரங்களில் நேரத்தை சிக்கனப்படுத்தலாம் என்று ஷார்ட் கட்டில் சென்று, ட்ராஃபிக்கில் சிக்கிக் கொள்வோம். கூகுள் மேப்பில் உள்ள 'ட்ராஃபிக்' ஆப்ஷனானது, எந்த வழியில் ட்ராஃபிக்கின் அளவு குறைவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவுவதோடு, புதிதாக செல்லும் ஓர் இடத்துக்கு வழிகாட்டவும் செய்கிறது. கூகுள் மேப்பில் உள்ள மெனுவில் ட்ராஃபிக் என்ற ஆப்ஷன் இருக்கும். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட், ஃபோர் வீலர், சைக்ளிங் என நம் பயணம் எந்தவித மோடில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகலாம் என்பதையும் கணித்துச் சொல்கிறது. இனி அலுவலகத்துக்குத் தாமதமாகாமல் சரியான நேரத்துக்குச் செல்ல இதைப் பயன்படுத்துங்கள்.
இவைகளைப் போன்றே அலுவலகத்தில் உங்களது பணியை சிறப்பாக முடிக்க உதவும், இந்த 5 பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment