டேஸ்டி துவையல்கள் ஹெல்த்தி பலன்கள்!
ஆரோக்கியத்தோடு சுவையையும் போனஸாகத் தரும் சூப்பர் ரெசிப்பி இஞ்சி - காரத் துவையல் தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய இளம் இஞ்சி - 2 ...

தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய இளம் இஞ்சி - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய கோலி அளவு.
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, புளி, உப்பு, தவிர பிற பொருள்களைச் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். பிறகு, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் சி, பி 6, மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. செரிமானத்தை எளிதாக்கும். வாயுப்பிடிப்பைப் போக்கும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் (Gingerol), ரத்தத்தை சுத்திகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
இஞ்சி - இனிப்புத் துவையல்
தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய இளம் இஞ்சி - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 4 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, இஞ்சி, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பலன்கள்: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், செரிமான அமிலம் சுரக்கும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் செரிமானக் கோளாறு, வயிற்று மந்தம் நீங்குகின்றன. வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
Post a Comment