ஈஸி வீடியோ எடிட்டிங்குக்கு இந்த 5 ஆப்ஸ் பெஸ்ட்..!
ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பின் கிட்டத்தட்ட அனைவரும் போட்டோகிராபர்களாக உருமாறத் தொடங்கிவிட்டோம். பிறந்தநாள் கொண்டாட்டம், சுற்றுலா என வ...
1. VivaVideo :
மொபைல் வீடியோவையும் ஆஸ்கர் அவார்டுக்கு அனுப்புவதைப் போல எடிட்டிங் கொண்டதாக மாற்ற இந்த அப்ளிகேஷன் உதவும். ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்களின் முடிசூடா மன்னன் இந்த வீவாவீடியோ தான். மொபைலில் எடுத்த வீடியோக்களை தரம் வாய்ந்த வீடியோவாக சில நிமிடங்களில் மாற்ற விரும்புவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் கை கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் புகைப்படங்களை மட்டும் இசையோடு சேர்த்து அழகான வீடியோவாக மாற்றவும் இது பெரிதும் உதவுகிறது. எளிதில் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்புதான் இதன் மிகப்பெரிய சிறப்பே! 10 கோடிக்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். வீடியோக்களுக்கு விருப்பப்பட்ட தீம்கள் கொடுக்கவும், வீடியோக்களில் எழுத்தை சேர்க்கவும் முடியும். தேவையற்ற பகுதிகளை 'Trim' ஆப்சன் மூலம் எளிதில் நீக்கிக்கொள்ள முடியும்.
டவுன்லோட் லிங்க் - https://play.google.com/store/apps/details?id=com.quvideo.xiaoying&hl=en
2. Power Director :
'ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!' என்பது போல் சிலர் வீடியோவின் ஒவ்வொரு நொடியையும் தானாக வடிவமைக்க நினைப்பார்கள். அவற்களுக்கேற்ப வீடியோ எடிட்டிங்கில் மேம்படுத்தப்பட்ட ஆப்ஷன்கள் கொண்டு இந்த பவர் டைரக்டர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண வீடியோக்களை ஸ்லோ மோஷன் வீடியோவாக இதில் சில நிமிடங்களில் எடிட் செய்துகொள்ளலாம். மேலும், இதில் உள்ள வீடியோ எஃப்.எக்ஸ் மூலம் 4K ரெசொல்யூஷனில் துல்லியமாக வீடியோக்களை உருவாக்க முடியும். வீடியோக்களில் எஃப்பெக்ட்ஸ் சேர்ப்பது இதில் மிக எளிது. இந்த அப்ளிகேஷனில் நிறைய டெம்ப்ளேட் இசை வடிவங்கள் சேர்ந்தே கிடைக்கின்றன. மொபைலில் இருக்கும் பாடல் அல்லது இசையை பயனாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்வதோடு, எடிட்டிங் செய்யும்போதே ரெக்கார்ட் செய்து ஒலியை சேர்த்துக்கொள்ளவும் முடியும். புகைப்படங்களை எடிட் செய்வதைப் போல இதில் டச்-அப் வேலைகளைச் செய்து, அதிநவீன வீடியோக்களை பயனாளர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
டவுன்லோட் லிங்க் - https://play.google.com/store/apps/details?id=com.cyberlink.powerdirector.DRA140225_01
3. Quik - Free Video Editor :
அலட்டிக்கொள்ளாமல் வீடியோவை எடிட் செய்ய விரும்புவோருக்கான அப்ளிகேஷன் இது. வீடியோவை இதில் லோட் செய்ததும், இந்த அப்ளிகேஷனே வீடியோவில் உள்ள சிறப்பான தருணங்களைப் பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. அதைத் தேர்வு செய்தால் தானாகவே எடிட் செய்து கையில் கொடுத்துவிடுகிறது. அதன்பிறகு தேவையான மாற்றங்களை மட்டும் நாம் செய்தால் போதுமானது. இதில் அதிகபட்சமாக 75 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒரே நேரத்தில் சேர்த்து எடிட் செய்துகொள்ள முடியும். புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள முகங்களையும், வண்ணங்களையும் இது எளிதாகக் கண்டறிவதால், அதற்குத் தகுந்தபடி ஃப்ரேம்களை சேர்த்துக் கொள்கிறது. இதில் 25 வீடியோ ஸ்டைல்களும், 80 பாடல்களும் உள்ளன. விருப்பத்துக்கேற்ப பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு ஏற்ப வீடியோக்களை சதுர வடிவத்தில் மாற்றியும் கொடுப்பது இதன் கூடுதல் சிறப்பு.டவுன்லோட் லிங்க் - https://play.google.com/store/apps/details?id=com.stupeflix.replay&hl=en
4. FilmoraGo :
இலவசமாகக் கிடைக்கும் பல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் தனது பெயரை வாட்டர்மார்க்காக கீழே சேர்த்துவிடும். 'ஓனர்ன்னா ஓரமா போகச் சொல்லு' என பலரும் அதைப்பார்த்து கடுப்பாகியிருப்போம். ஃபிலிமோராகோ அப்ளிகேஷன் அந்த விஷயத்தில் சமத்துப்பிள்ளை. தனது பெயரை வாட்டர் மார்க்காக இது சேர்ப்பதில்லை. மேலும், குறிப்பிட்ட நேரம் கொண்ட வீடியோவை தான் எடிட் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடையும் விதிப்பதில்லை. மற்ற அப்ளிகேஷன்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆப்ஷன்களோடு சேர்த்து இதில், வீடியோவை ரிவர்ஸில் ஓடக்கூடியதாகவும் மாற்ற முடியும். எடிட் செய்யும்போதே அதை ப்ரிவ்யூ செய்து பார்த்துக்கொள்ளவும் முடியும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் இருந்து வீடியோக்களை இறக்குமதி செய்வதும், எடிட் செய்த வீடியோவை அவற்றில் பகிர்வதும் இதில் மிக எளிது. வீடியோவின் வேகத்தை கூட்டவும், குறைத்துக் கொள்ளவும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ப இந்த அப்ளிகேஷன் இலவசமாக அளிக்கும் தீம்கள், ஃபில்டர்களையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.டவுன்லோட் லிங்க் - https://play.google.com/store/apps/details?id=com.wondershare.filmorago&hl=en
5. Video Editor - We Video :
தரமான வீடியோ எடிட்டிங் ஆப்ஷன்கள், எளிதான வடிவமைப்பு, மெமரியை அடைத்துக் கொள்ளாமல் குறைவான அளவு கொண்டது 'வீ வீடியோ' நிறுவனத்தின் இந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன். உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் இந்த அப்ளிகேஷன்கள் மூலமாக வீடியோக்களை எடிட் செய்கிறார்கள் என்பது இதன் எளிய வடிவமைப்புக்கு ஒரு உதாரணம். எமோஜி ஸ்டிக்கர்கள், இலவச டெம்ப்ளேட்கள், இதன்மூலம் எடிட் செய்வது எளிது, தரத்திலும் குறைவில்லை என்பன போன்ற காரணங்களால் இதைக் கண்டிப்பாகப் பயன்படுத்தலாம் என ஆண்ட்ராய்டு விஞ்ஞானிகள் பரிந்துரைக்கிறார்கள்.டவுன்லோட் லிங்க் - https://play.google.com/store/apps/details?id=com.wevideo.mobile.android&hl=en
இனி ஸ்மார்ட்ஃபோன் மூலமாக தரமான புகைப்படங்களை கிளிக் செய்வதோடு, வீடியோக்களையும் ஸ்மார்ட்டாக உருவாக்குங்கள்
Post a Comment