பெண் Money - மகளுக்காக... செல்வ மகளுக்காக!
``வி லைவாசி எகிறிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் வேக ஆண்டு களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் கல்வி, எதிர்காலம், திருமணம் ஆகிய ...

https://pettagum.blogspot.com/2016/11/money.html
``விலைவாசி
எகிறிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் வேக ஆண்டு களில் நாம்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் கல்வி, எதிர்காலம், திருமணம் ஆகிய
மூன்று நிலைகளுக்கான சேமிப்பு முன்னெடுப்புகள் அவசியம்'' என்கிற நிதி
ஆலோசகர் முகைதீன் மாலிக், அதற்கான திட்டமிடல் பற்றியும் விளக்குகிறார்.
முதலில் கல்வி... பெண்குழந்தைகள் 12 வருடங்கள் பள்ளிக் கல்வியும்
(pre-kg தவிர), அதன்பிறகு விருப்பத்துக்கு ஏற்ப 3 - 6 ஆண்டுகள் வரை
உயர்கல்வியும் படிக்கப் போகிறார்கள். இன்று ஒரு வருட படிப்புக்கு 2 லட்சம்
ரூபாய் தேவை என்று வைத்துக்கொண்டால், 18 வருடங்கள் கழித்து அதன் அளவு
பலமடங்காகத்தானே இருக்கும்?
திருமணத்துக்கு இன்றைக்கு 10 லட்ச ரூபாய் குறைந்தபட்சத் தேவை என்றால், புதிதாக பிஞ்சுக்கால்களை பூமியில் பதித்திருக்கும் பெண்குழந்தை வளர்ந்து, மணமகளாகும்போது, திருமணச் செலவு 30 - 40 லட்சத்தைத் தாண்டலாம். இத்தனை பணச்சிக்கல்களையும் சேமிப்பின் மூலமாக தீர்க்க முடியுமா? நிச்சயம் முடியும். பெண்குழந்தைகளின் எதிர்காலத்துக்குக் கொட்டிக் கிடக்கும் சேமிப்பு சங்கதிகள் நிறைய... நிறைய!
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
கல்வி, மேற்படிப்பு, எதிர்காலத்துக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சேமிப்புத் திட்டம்தான் ‘சுகன்யா சம்ரிதி’ (செல்வ மகள் சேமிப்புத் திட்டம்). வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் ‘செல்வ மகள்’ கணக்குத் தொடங்கலாம். சேமிக்கும் தொகையில் 50 சதவிதத்தை மகளின் 18 வயதில், மேற்படிப்புக்காகப் பெற்றுக்கொள்ளலாம். மீதி தொகையை அவரது திருமணத்தின்போது பெற்றுக்கொள்ளலாம்.
பிறந்த குழந்தையில் இருந்து குழந்தையின் 10 வயது வரையில் இந்த சேமிப்புக் கணக்குத் தொடங்க முடியும். அவரவர் சக்திக்கேற்ப ரூ.1,000 முதல் 1,50,000 வரை செலுத்தலாம். எனினும், பெண் குழந்தை பிறந்த உடனேயே சேமிக்க ஆரம்பிப்பது நல்லது.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்
எஸ்.ஐ.பி. என்கிற இம்முறையில் மாதம் ரூ.2000 சேமிக்கையில், ஆண்டுக்கு 15
சதவிகித லாபம் எனில், குழந்தையின் 18 வயதில் அதிகபட்சம் 17 லட்ச ரூபாய்
கிடைக்கக்கூடும்.
வேறு என்ன திட்டங்கள்?
நம் சேமிப்பில் 60 சதவிகித முதலீடு பெண்குழந்தைக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல லாபம் தரும் ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதும் உங்கள் செல்வமகளின் எதிர்காலத்துக்கான சிறந்த வழி.
ரிஸ்க்கே இல்லாத திட்டங்கள் வேண்டுமா? வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், எண்டோவ்மென்ட் பாலிசிகள்.
ரிஸ்க் கொஞ்சமாக இருந்தால் பரவாயில்லையா? டெப்ட் மற்றும் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்.
அதிக ரிஸ்க் திட்டங்கள் ஓ.கே-வா? பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்.
ரிஸ்க் அதிகமாக உள்ள திட்டங்களில், வருமானமும் அதிகமாக இருக்கும். எனினும், குழந்தைகளுக்கு வயது வருகின்றபோது, ரிஸ்க்கான திட்டங்களில் இருந்து, ரிஸ்க் குறைவான முதலீட்டுத் திட்டங்களுக்கு சேமிப்பை மாற்றுவதே நல்லது.
இவை உங்களுக்கான வழிமுறைகள்தான். வருமானம், மாதாமாதம் சேமிப்புக்கு
ஒதுக்க முடிந்த தொகை, குழந்தையின் எதிர்காலம் சார்ந்த உங்களுடைய
ஐடியாக்களின் அடிப்படையில் சிறந்த சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.
அதையும், இன்றே தொடங்குங்கள்!
(கொஞ்சம் பேசுவோம்... நிறைய சேமிப்போம்!)

Post a Comment