"தெரிந்து கொள்ளுங்கள்”
ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI ~ International Mobile Equipment Id...

https://pettagum.blogspot.com/2016/11/blog-post_13.html
ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI ~ International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டைப் பையில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவமனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
Post a Comment