ரவா தோசை!
ரவா தோசை தேவையானவை: ரவை - 125 கிராம் (வறுக்காதது) அரிசி மாவு - 125 கிராம் மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூ...

ரவை - 125 கிராம் (வறுக்காதது)
அரிசி மாவு - 125 கிராம்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மோர் - 500 மில்லி தண்ணீரில் 5 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்
எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து, தோசை பதத்துக்குக் கரைத்து வைக்கவும். இதை தோசை சுடுவதற்கு பத்து நிமிடம் முன்பு கரைக்க வேண்டியது முக்கியம். இந்த மாவு பதம் சற்று நீராகவும், சற்று கெட்டியாகவும் இருக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சிறிது நெய்/எண்ணெய் ஸ்பிரே செய்து தோசை மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
2 comments
Nice...
For Tamil Typing
Thanks sir
Post a Comment