இடுப்புச் சதை குறைய எளிய உடற்பயிற்சி !

இடுப்புச் சதை குறைய எளிய பயிற்சி ! முரளி உடற்பயிற்சி நிபுணர் “முப்பதுகளைக் கடந்த பெண்களுக்கு, மிகப் பெரிய பிரச்னையே உ...

இடுப்புச் சதை குறைய எளிய பயிற்சி !



முரளி உடற்பயிற்சி நிபுணர்
“முப்பதுகளைக் கடந்த பெண்களுக்கு, மிகப் பெரிய பிரச்னையே உடல்பருமன்தான். குழந்தைப்பேறுக்குப் பின் கவனிக்காமல்விட்ட உடலை, வருடங்கள் தாண்டிய பின் குறைக்க முடியாமல் மன உளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள். ‘எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்’ என பழைய புகைப்படங்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதும் நடக்கிறது. ‘‘வெயிட் குறைக்கலைன்னா, சர்க்கரை நோய், இதயநோய் வந்துடும்’’ என டாக்டர்களும் எச்சரிக்க, இன்னும் பதட்டமாகிவிடுகிறார்கள்.

காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை.  வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.


பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg):
 தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும். இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
அப்ளிக்யூ எக்சர்சைஸ் (Oblique exercise)
தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். தலையைத் தரையில் இருந்து உயர்த்தி, இடது கையை மடக்கி, காதின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். வலது கையைத் தரையில் நேராக நீட்டிக்கொள்ளவும். வலது காலை மடக்கி இடது கால் முட்டியின் மீது வைக்க வேண்டும். இப்போது, இடது காலைத் தரையில் இருந்து இரண்டு அடி உயர்த்தி இறக்க வேண்டும். இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும். இரண்டு கால்களுக்கும் தலா 10 முறை இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், தேவையற்ற சதை சேராது. தொடைப் பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்னைகள் வராமல் பாதுக்காக்கும். தொடைப் பகுதியை ஃபிட்டாக்கும்.

ஹிப் அவுட்டர், ஹிப் இன்னர் (Hip outer and hip inner)
வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.   வலது கையால் தலையைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இடது கையை மடித்து, முன்பக்கம் தரையில் பதிக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, இடது காலை 10 முறை இயன்றவரை உயர்த்தி இறக்க வேண்டும். இதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். இடுப்புப் பகுதி, தொடைப் பகுதி சதைகள் வலுப்பெறும்.

க்ளூட்டீஸ் கிக்  (Glutes kick)
கைகளைத் தரையில் ஊன்றி, முட்டி போட வேண்டும்.  தலை நேராக இருக்கட்டும்.  வலது காலை மட்டும்  பின் நோக்கி உயர்த்த வேண்டும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்புச் சதைகள் உறுதியாகும். தொடைச் சதை குறைந்து உடல் ஃபிட் ஆகும்.

சூப்பர் மேன் (Super man)
தரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்பக்கம் நீட்டியபடி, கால்களைத் தரையில் படாதபடி உயர்த்திக்கொள்ள வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: இதயம் வலிமை பெறும். முதுகுத் தண்டுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தொடைப் பகுதியில் இருக்கும் சதை வலிமை அடையும்.

பேலன்ஸ் ரீச் (Balance reach)
நேராக நின்று, வலது காலை பின் நோக்கி உயர்த்தி, தலைப் பகுதி தோள்பட்டைக்கு நேராக வரும்படி மடங்கிக்கொள்ளவும். அந்த நிலையில் இருந்தபடியே, வலது கையை நேராக நீட்டிக்கொள்ளவும். பிறகு, கையை இடுப்புப் பகுதிக்கு நேராகக் கொண்டுவரவும். அடுத்து, மூட்டுக்குப் பக்கமாகவும், பிறகு தரையில் படும்படியும் என நான்கு நிலைகளில் கொண்டு வரவும். பழைய நிலைக்குத் திரும்பவும்.  இதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்: உடல் உறுப்புகள் சமச்சீராக இயங்க உதவும். உடலை நன்கு வளைப்பதால், சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும்.

Related

உடற்பயிற்சி 1282143254130986098

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item