"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ? இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து வ...

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா? எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்!

இப்போது எங்கு பார்த்தாலும் விதவிதமான ஏ.சி.கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு அறையை குளிற வைக்கும் ஏ.சி., காற்றை சுத்தமாக்கும் ஏ.சி. என்று எத்தனையோ....

நீங்கள் வாங்கும் ஏ.சி. புதிது, உபயோகித்தது, பிராண்டட், அசம்பிள்டு என்று எதுவாக இருந்தாலும் சில குறிப்புகளை நினைவில் வைப்பது நல்லது.

ஜன்னலில் பொருத்தக் கூடியவை:

ஜன்னலின் கீழ் பாகத்தில் இது எளிதாக பொருந்திவிடும். இதற்காக சுவரை உடைக்க வேண்டிய அவசியமில்லை.

இதை எளிதாக கழற்றவும், மாட்டவும் முடியும். அதனால் வாடகைக்கு ஏ.சி. வாங்கினாலும், வாடகை வீட்டில் பொருத்த வாங்கினாலும், இதுவே சிறந்தது.

சுவரில் பொருத்தக் கூடியது:

இவை பார்ப்பதற்கு அழகானவை. ஆனால் விலை கொஞ்சம் கூடுதல்.

ஜன்னலை ஏ.சி.யால் அடைக்க விரும்பாதவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். வேண்டிய இடத்தில் பொருத்தலாம்.

வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சுவரில் துளை போட அனுமதிப்பார்களா என்பதை வாடகை வீட்டில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.

ஜன்னலில்/சுவரில் பொருத்தக் கூடியது:

வாடகை வீட்டில் இருக்கும்போது, ஜன்னலில் பொருத்திக் கொள்ளலாம். சொந்த வீட்டுக்கு மாறியவுடன் சுவரில் பொருத்தலாம்.

ஜன்னலிலும், சுவரிலும், பொருந்தக் கூடியது என்பதால் இது பலரால் விரும்பப்படுகிறது. ஆனால் இதன் விலையும் அதிகம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

தேவையான அளவு அறை குளிர்ந்த பிறகு பொதுவாக கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆனால் ஏ.சி.க்கு உள்ளே இருக்கும் விசிறி வேலை செய்வதால் மின் கட்டணம் ஏறிக்கொண்டே போகும். கம்ப்ரெஸ்ஸர் நிற்கும் போது விசிறியும் நிற்பது போன்ற வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.

ஆஸிலேடிக் வெண்ட்ஸ் இருந்தால் வெளியே வரும் குளிர்ந்த காற்று அறை முழுக்க சீராக பரவும்.

ரிமோட் கன்ட்ரோல் வசதி இருந்தால் உட்கார்ந்தபடியே ஏ.சி.யை இயக்கலாம்.

டைமர் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏ.சி.யை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.

ஒன்று அல்லது இரண்டு வருடம் நிறுவனத்தின் உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு ஏ.சி.யை வாங்குவதே நல்லது.
 
புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்
 
 
ஏர்கண்டிஷனர் ஏற்பாடுகள்!

இன்று வீடு, அலுவலகம், ஹோட்டல், சினிமா தியேட்டர் என எல்லா இடங்களிலும் ஏர்கண்டிஷனர் எனப்படும் ஏ.சி. பயன்படுகிறது. ஆடம்பரமான பொருள் என்பதைத் தாண்டி அவசியமான பொருள் என்றாகி விட்டது இந்த ஏ.சி. ஆனால், அதற்காக செலவிடும் தொகைதான் அதிகம். அதன் உபயோகத்தில் எப்படி மின் செலவைக் கட்டுப்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்துவது..?

  சுட்டெரிக்கும் கோடைக்காலம் தவிர்த்து, மற்ற சீஸன்களில் சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன்களையே பயன்படுத்தலாம். காரணம், இவற்றை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். இதுவே ஏ.சி-யை பயன்படுத்தினால்... ஒரு மணி நேரத்துக்கு ரூபாய்களில் செலவாகும்!

  ஏ.சி. இருக்கும் அறையில் குறைந்த அளவு சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு பார்த்துக் கொண்டால் 'குளுகுளு' மெயின்டெயின் ஆகும். மின்சாரமும் அதிகம் செலவாகாது.

  உலகத்துக்கே இயற்கைதானே எஜமான்! வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களின் மீது நிழல் படும்படி மரங்களை வளர்த்தால், 'ஏ.சி'-க்கான மின்சாரத்தில் நாற்பது சதவிகிதத்தை சேமிக்கலாம் என்று நிரூபணம் செய்திருக்கின்றன ஆய்வுகள். அப்புறம் என்ன... மரம் நடுங்கள்; வளம் பெறுங்கள்.

  ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறையின் மேற்கூரை வெப்பத்தை உள்ளே கடத்தும் வகையில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், குளிர்ச்சியை வெளியே கடத்தாத வண்ணங்களை அங்கு தீட்டுவது சிறந்தது.

  ஏ.சி. பொருத்தப்பட்டுள்ள அறையின் மேற்கூரையின் கீழே செயற்கை சீலிங் (ஃபால்ஸ் சீலிங்) அமைக்கப்படுவதால், மேற்கூரையிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர் வீச்சு குறையும்; குளிரூட்டப்படும் அறையின் பரப்பளவும் குறைவதால், குறைந்த மின்சாரத்தில் 'ஜில்ஜில்' என இருக்கும்.

 ஏ.சி-யிலிருந்து வரும் குளிர்க்காற்று கீழ்நோக்கி வீசும் தன்மையுடையதால், தரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரத்துக்கு மேல் ஏ.சி-யை பொருத்துவதுதான் சரியான முறை. 'நாங்க கீழ வச்சுட்டோமே.. என்ன பண்றது' என்பவர்கள், அதன் ஸ்விங் மோட் (Swing Mode), எப்போதுமே மேல் நோக்கியதாக இருக்குமாறு அமைத்து விட்டால், பிரச்னை தீர்ந்து விடும்.

  ஸ்பிலிட் ஏ.சி-யின் கம்ப்ரஸரை (compressor) எப்படி வைப்பது..? எங்கு வைப்பது..? - இதுதான் நிறைய பேருக்கு வரும் சந்தேகம். ஏ.சி. பொருத்தப்படும் அறைக்கு வெளியே குளிர்ச்சியான, நிழல்பாங்கான இடமாக பார்த்து வைத்தால், சூரிய ஒளிபட்டு வெப்பமாவது தடுக்கப்படும்.

  ஸ்பிலிட் ஏ.சி-யின் பழைய கம்ப்ரஸர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றுவது நல்லது. அதற்கு மேலும் பழைய கம்ப்ரஸரை பயன்படுத்தாமல், புதிய கம்ப்ரஸர்களை அமைத்து செயல்திறனை அதிகரித்தால்... மின்செலவு குறையும்.
  
 ஏ.சி-யின் மின் செலவை ஈஸியாகக் குறைத்திட வேண்டுமா..? எப்போதுமே... 25 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே ஏ.சி-யின் 'தெர்மோஸ்டாட்' இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு கீழே குறையக் குறைய... மின்செலவு அதிகரிக்கும். போர்வைதான் இருக்கிறதே என்று 18 என்ற அளவிலேயே பயன்படுத்தினால்... பர்ஸ் கரையத்தான் செய்யும்!

  ஏ.சி-யையும் ஃபேனையும் ஒருசேர பயன்படுத்துவது நல்லதல்ல. அது தூக்கத்தையே குலைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஏ.சி-யை ஓடவிட்ட பிறகு, அதை ஆஃப் செய்துவிட்டு, ஃபேனை ஓடவிடலாம். ஃபேன் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் மின் சிக்கனம் சாத்தியமாகிறது. அறை ஏற்கெனவே குளிர்ந்திருப்பதால், குளுமைக்கும் குறைவிருக்காது.

 ஏ.சி. மெஷினானது, ஓர் அறையை 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியாக்கிவிடும். எனவே, நேரக்கட்டுப்பாட்டுக் கருவியை (Timer) பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

   ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளில் குளிர் வெளியே செல்லாதவாறு கதவுகள் இடைவெளியில்லாமல் மூடப்பட்டிருந்தால், அதுவும் மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்.

  ஏ.சி-யின் 'ஃபில்டர்', மாதம்தோறும் தவறாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அதில் அழுக்குப் படிந்து காற்றோட்டத்தைக் குறைத்து, ஏ.சி. மெஷினை விரைவில் பழுதாக்கி விடும். சுத்தமான 'ஃபில்டர்', விரைவாக குளிர்வதற்கு உதவுவதன் மூலம், மின்சக்தி இழப்பினை தடுத்து, உங்கள் பர்ஸைக் காப்பாற்றும்.

  ரிப்பேர் ஆகும் நிலையில் உள்ள ஏ.சி-யை இயக்கினால், அது குறைந்த அளவு குளிர்ச்சியைத்தான் தரும்; தொடர்ந்து இயக்கினால், உடனே பழுதாகி புதிய ஏ.சி. வாங்கும் செலவை உண்டாக்கும். 'ஏதாவது கோளாறு...' என்று தெரிந்தால், உடனடியாக அதை சரி செய்வதுதான் சாமர்த்தியம்.

  ஏ.சி-க்கு அருகிலேயே போட்டோ காப்பி மெஷின் (ஜெராக்ஸ் மெஷின்), ஸ்டெபிலைஸர், யு.பி.எஸ். போன்ற வெப்பத்தை வெளியிடும் கருவிகளை வைக்காமல், தூரத்தில் வைப்பது இரு கருவிகளுக்கும் நல்லது.

  மின் அடுப்பு, காபி தயாரிக்கும் கருவி, வாட்டர் கூலர், ஃப்ரிட்ஜ், அயர்ன்பாக்ஸ் போன்ற வெப்பத்தை வெளியிடும் மின்கருவிகளையும் ஏ.சி. அறைகளில் அறைகளில் பயன்படுத்தாமல் இருப்பது மின் சிக்கனத்துக்கான வழி.

  ஏ.சி. அறையை விட்டுக் கிளம்பப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால், அறையின் குளிர்நிலை கொஞ்ச நேரம் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு, அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ஏ.சி-யை ஆஃப் செய்துவிடலாம்.
 
ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புஇருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது.

மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2
முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.

ஏசி வாங்கும்போது இலவச ஸ்டெபிலைஸரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அது ஒரிஜினல் பிராண்ட்தானா என்பதைப் பார்த்து வாங்கவும். சிலகடைகளில் விலை மலிவான சீனத் தயாரிப்புகளைக் கொடுத்துவிடுவார்கள். அலுமினிய ஸ்டெபிலைஸர் ஏசியைப் பாழாக்கிவிடும். நல்ல தரமான ஸ்டெபிலைஸரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும்.

ஏசி இணைப்பில் இருக்கும் ஒயர்கள் அடிக்கடி லூசாகிவிடும். அதனால்தான் தீ விபத்து, ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏசியில் உள்ள ஒயர்கள் சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக்கின் உதவியோடு அவ்வப்போது சோதனை செய்வது நல்லது.

குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது. குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏசி இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும்.

நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில்அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே 23 - 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை ஏசியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.

ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லது. வெப்பம் அறைக்குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி அடையாது. இதனால் மின்சாரமும் வீணாகும்.

ஏசியை சரியாக துளையிட்டு பொருத்தாவிட்டால் அதிகம் சப்தம் எழுப்பும். பர்ச்சேஸ் செய்யும் கடையிலேயே பிராண்டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக்கொடுக்க நபர்கள் இருப்பார்கள். அவர்களையே அழைத்து ஏசியை பொருத்துவது நல்லது.

சர்வீஸ் செய்யும்போது காயில் க்ளீன் செய்யப்படுகிறதா? ஃபேன் மோட்டார்களுக்கு ஆயில், பெல்ட் அட்ஜஸ்ட்மெண்ட், கம்ப்ரஸர் க்ளீனிங் எல்லாம் செய்கிறார்களா என்பதை அருகிலிருந்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

ஏசி பொருத்தப்பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியாவதற்கான நேரம் அதிகமாகும். அதன் காரணமாக மின்சாரம் அதிகம் செலவாகும்.

ஏர் கூலர் எப்படி?

அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியாதவர்கள், சுவரில் ஏசி பொருத்தும் வசதி இல்லாதவர்களுக்கு ஏர்கூலர் சரியான சாய்ஸ். ஆனால், ஏர்கூலர்

கடல் காற்று வீசும் அல்லது அதிக ஈரப்பதம் நிலவும் பிரதேசங்களில் சரிவர பயன் அளிக்காது. சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஏர்கூலரால் பலனில்லை. ஏர்கூலர் குளிர்ந்த காற்றை மட்டுமே தரும். ஏசியில் கிடைக்கும் குளிர்ச்சி ஏர்
கூலரில் கிடைக்காது.

ரூ15 லிட்டர், 25 லிட்டர், 45 லிட்டர் என அறையின் தன்மைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். உஷா, கென்ஸ்டார், சிம்பொனி என பல பிராண்டுகள்கிடைக்கின்றன. விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாய்க்குள்.

குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக்கூடாது

என்ன பிராண்ட்? என்ன விலை? (ரூபாயில்)
முக்கால் டன்
ஒனிடா    17,990
கோத்ரெஜ்    17,990
80 சதுர அடி கொண்ட அறைக்கு முக்கால் டன் ஏசி போதும். ஆன் செய்த 15 நிமிடங்களில், அறையில் போதுமான குளிர்ச்சி கிடைத்துவிடும்.
 
ஒரு டன்
வீடியோகான்    17,990
பேனசோனிக்    20,990
கோத்ரெஜ்    20,990
ஒனிடா    20,990
வோல்டாஸ்    22,000
எல்ஜி    22,990
சாம்ஸங்    22,990
ப்ளூஸ்டார்    26,990
ஹிடாச்சி    28,990
100 - 150 சதுர அடி கொண்ட அறைக்கு ஒரு டன் ஏசி போதும். ஆன் செய்த 20 நிமிடங்களில் அறை ஜில்லாகிவிடும்!
 
ஒன்றரை டன்
வீடியோகான்    21,490
கோத்ரெஜ்    24,490
ஒனிடா    25,490
வோல்டாஸ்    25,500
எல்ஜி    26,490
சாம்ஸங்    26,490
பேனசோனிக்    26,990
ப்ளூஸ்டார்    30,990
ஹிடாச்சி    32,990
160 - 180 சதுர அடி அறைக்கு இந்த ஏசி போதுமானது.
 
2 டன்
எல்ஜி    35,490
சாம்ஸங்    34,490
ஹிடாச்சி    39,000
கோத்ரெஜ்    33,900
ஒனிடா    33,900
ப்ளூஸ்டார்    37,500
பேனசோனிக்    33,000
வோல்டாஸ்    32,790
ஓ ஜெனரல்    39,990
200 - 240 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசி பொருத்தலாம்.

Related

40க்கு மேலும் நலமாக வாழ... ! ஹெல்த் ஸ்பெஷல்!!

40க்கு மேலும் நலமாக வாழ...  !  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி  செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை தினம் ஒரு அரை மணி நேரம் விளையாடுங்கள். வி...

பரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்படுத்தினால் லாபம்! உபயோகமான தகவல்கள்!!

பரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்படுத்தினால் லாபம்! கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர். நமது கலாசாரம் பல பண்டிகை களோடும் விழாக்களோடும் பின்னிப் பிணைந்ததாகும். குடும்ப விழாக்களில் ம...

வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி...

வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி... இந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச் சலுகையை முறையாகப் பய...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 8:16:36 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,716

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item