வாய்க்கு ருசி... உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!! சோள கொழுக்கட்டை & கீரைப் பொங்கல்!!

வாய்க்கு ருசி... உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!! சோள கொழுக்கட்டை தேவையானவை: சோளம் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 5, நறுக...

வாய்க்கு ருசி... உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!!

சோள கொழுக்கட்டை
தேவையானவை: சோளம் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 5, நறுக்கிய கேரட், தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  - சிறிதளவு,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: சோளத்தை மிதமான தீயில் வறுத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். சோள மாவுடன் உப்பு, நெய் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவும். ஆவியில் வேகவைத்த சோள மாவை காய்கறிக் கலவையுடன் நன்கு கலந்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து மீண்டும் ஆவியில் வேகவிட்டு எடுத்து, பரிமாறவும்.
புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது... சோளம்!


கீரைப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - அரை கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மிளகு - சீரகப் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: குக்கரில் நெய் விட்டு, மிளகு - சீரகப் பொடி, கீறிய பச்சை மிளகாய், கீரை, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.

Related

சமையல் குறிப்புகள்-சைவம்! 239651271139946714

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item