கிரீன் டீ எடை குறைக்குமா ?

கிரீன் டீ எடை குறைக்குமா ? உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்...

கிரீன் டீ எடை குறைக்குமா ?
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் டீ கேன் வைத்து விற்பவர் வரை எங்கும் கிரீன் டீ.  எடை குறைய கிரீன் டீ குடியுங்கள் என விளம்பரங்கள். கிரீன் டீ உண்மையாகவே உடலுக்கு நல்லதா? எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? 

உடலுக்கு ஆரோக்கியம்
கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க,  தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
 
பற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ்  (Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள் பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால், அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக் காக்கும்.

கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்

களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.  சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

இதயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக் கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ. இதய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.


கிரீன் டீ யாருக்கு ஏற்றது?
மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?
பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.
கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.

Related

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனை! கைவைத்திய முறைகள் !!

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனை!  கைவைத்திய முறைகள் இனி அனுபவ மருத்துவமான பாட்டி வைத்தியம், கை ...

பூண்டு லேகியம்-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

பூண்டு லேகியம் தேவையானவை:  உரித்த பூண்டு - 200 கிராம்  துருவிய தேங்காய் - ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)  கருப்பட்டி - கால் கிலோ  இஞ்சி - 75 கிராம்  கட்டிப் பெரு...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 12:28:58 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,845

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item