இயற்கை முறையில் எடையை குறைக்கலாம்! ஹெல்த் ஸ்பெஷல்!!

இயற்கை முறையில் எடையை குறைக்கலாம்! 'சுலபமான எடைக் குறைப்புக்கு வழி என்ன? மனசும் கொஞ்சம் முயற்சியும் இருந்தால், எடைக் குறைப்பு ...

இயற்கை முறையில் எடையை குறைக்கலாம்!
'சுலபமான எடைக் குறைப்புக்கு வழி என்ன? மனசும் கொஞ்சம் முயற்சியும் இருந்தால், எடைக் குறைப்பு மிகவும் எளிதுதான்' என்கிறார், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன்.

128 கிலோ எடை இருந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெகன், இவரது ஆலோசனை பெற்று, ஒரே வருடத்தில் 50 கிலோ வரை எடையைக் குறைத்திருக்கிறார்.  

'எனக்கு ஷிப்பிங் பிசினஸ். ரெண்டு குழந்தைகள். நான் பள்ளி, காலேஜில் படிக்கிற காலத்துல இருந்து கிட்டத்தட்ட 20 வருஷமா உடல் பருமனாவேதான் இருந்தேன். எங்க வீட்டு சமையல்ல நான்வெஜ், ஆயில் எல்லாம் அதிகமாகவே இருக்கும். நல்லா சாப்பிடுவேன். ஆபீஸ்ல போய் ஏ.சி ரூம்ல உக்கார்ந்தே இருப்பேன். டென்ஷன் வந்தா எதையாவது கொரிப்பேன். இப்படி, உடம்பு ஏறுறதுக்கு எல்லாமே காரணம் ஆயிடுச்சு.
முதல்ல, என் உடல் பருமனைப் பத்திப் பெரிசா கவலைப்படல. ஆனா, நாளாக ஆக, என்னால் நடக்கவோ, காரில் ஏறவோ முடியாம, ரொம்ப சிரமப்பட்டேன். பார்க்கிறவங்க எல்லாம் என் மனசு புண்படற மாதிரி பேசினாங்க. இதனால, என்னை விட என் மனைவி ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. அவங்க ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. இதுவே எனக்குள்ள, ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, வீட்டுக்குள்ளேயே முடங்கவெச்சிடுச்சு. என்னோட பருமன், ரெண்டு பேருக்குமே பயங்கர ஸ்ட்ரெஸ் தரும் விஷயமானப்பதான், உடல் பருமனைக் குறைக்க முடிவு பண்ணேன்.

இடுப்புச் சதையைக் கரைக்கும் ஹீட்டிங் பெல்ட், ரெடிமேட்  பவுடர்கள், ஜிம் பயிற்சிகள், அதுஇதுன்னு எல்லாத்தையும் முயற்சி பண்ணியும், எடை குறையலை. அப்பதான்  டாக்டர் வெங்கடேஷ்வரனைச் சந்திச்சேன். அவருடைய நம்பிக்கை தரும் பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது. முதல்ல நாடி பிடிச்சுப் பார்த்து, பின்னர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். அதுல, எனக்கு கெட்ட கொழுப்பு அளவு அப்நார்மலா இருந்தது. ஸ்ட்ரிக்ட் டயட், அக்குபங்க்ச்சர் சிகிச்சை, யோகா, மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தது.  முதல் 10 நாட்கள் வெறும் பழச்சாறுகள், க்ரீன் டீ, சூப் மாதிரி திரவ உணவுகள் (க்ளென்ஸிங் டயட்)மட்டும்தான். வயிறு பசிச்சாலும், எடை குறையணும்கிற வெறியில் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணேன். அதுக்கப்புறம், பழங்கள், வேகவைச்ச காய்கறிகள், முழு ஓட்ஸ்(Oat bran), முட்டையின் வெள்ளைப் பகுதின்னு மாறுச்சு. அப்பப்ப, என் நாடியைப் பார்த்து டயட் மாத்துவார் டாக்டர்.  ரெண்டு மாசத்துக்கு சுத்தமா அரிசியே தொடலை. ரொம்ப முக்கியமானது, ஒரு மணி நேரத்துக்கொரு முறை, ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பேன்.
முதல் 6 மாசத்துக்கு மட்டும், உடலில் இருக்கிற நச்சுக்கள் வெளியேறதுக்காக, வாரத்துல மூணு நாள் ஸ்டீம் பாத், ஆயில் மசாஜ்னு தொடர்ந்ததில், 6 மாசத்தில் 28 கிலோ குறைஞ்சு, 100 கிலோவுக்கு வந்துட்டேன்.   இப்ப என் எடை 78 கிலோ. 52 இன்ச் இருந்த இடுப்பு சைஸ், 34க்கு வந்துருச்சு. இப்ப என் கொலஸ்ட்ரால் லெவலும், ரத்த அழுத்தமும் நார்மல் ஆயிடுச்சு. இப்பவும், ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ் இருக்கு. ஆனால், மைண்ட்ல டயட் கான்ஷியஸ் இருக்கிறதால, அந்த சமயத்தில் கிரீன் டீ, பிளாக் டீ, பிளாக் காபி, கொய்யா, பப்பாளி, சுண்டல்னு ஹெல்தியான ஸ்நாக்ஸ்தான் எடுத்துக்கிறேன்.
எடையைக் குறைக்க முதலில் தேவை தன்னம்பிக்கை, வைராக்கியம். முதல் 10 நாள் கஷ்டமா தான் இருக்கும். அப்புறம் பழகிடும். ரொம்பப் பாதுகாப்பானது, பக்க விளைவு இல்லாதது இயற்கை வைத்திய முறைதான்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் ஜெகன்.

எடை குறைப்பு சாத்தியம்?
டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் தரும் டிப்ஸ்:
'கணிசமான அளவு எடையைக் குறைத்துவிடலாம்’ என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாக விதைக்கவேண்டும். 'என்னால் முடியுமா?’ என்ற கேள்வியோடு வருபவர்களுக்கு, முடியும் என்ற நம்பிக்கையை வரவழைப்பதுதான் மிகவும் முக்கியம். தினமும் என்ன சாப்பிடுகிறோமோ, அதை சாப்பிட்டுக்கொண்டே எடையைக் குறைக்கலாம். அதுதான் சாத்தியம்கூட.  எடையைக் குறைக்க காலை உணவு அவசியம். ஆனால், இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய், சுக்கு, தனியா, குடமிளகாய், புரோகோலி, பாலக், கோஸ், வெங்காயம், பூண்டு, செலரி போன்றவை, கொழுப்பைக் குறைக்க உதவும். அடர் நிறங்கள் கொண்ட, வெவ்வேறு நிறக் காய்கள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை (ஜீனி), மைதா, சாஃப்ட் டிரிங்க்ஸ், பேக்கரி தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். அல்லது அறவே ஒதுக்க வேண்டும்.

நான் தந்துள்ள 'ஐடியல் டயட் சார்ட்’ முறையில் சாப்பிடுங்கள் (இது பொதுவானது. அவரவர் விருப்பம் மற்றும் உடல்நிலைக்கேற்ப இது மாறும்). மாதத்துக்கு 4 கிலோ எடையை கண்டிப்பாகக் குறைக்கலாம். கூடவே, வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறையும். கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு வரும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு கூடி, கெட்ட கொழுப்பின் (HDL) அளவு குறையும்.

சரியான விகிதத்தில், சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி. எல்லாவற்றையும்விட மேலாக, ஸ்ட்ரெஸ்’ இல்லாத வாழ்க்கைமுறை இருந்தால் போதும். எளிதில் குறைக்கலாம் எடை!
ஐடியல் டயட் சார்ட்!
 காலை எழுந்ததும், காபி, டீ அருந்துவதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு. அடுத்ததாக சிறிது கிரீன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்காத காபி / டீ.

 காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது கீரை / காய் ஸ்டஃப் செய்த தோசை. தொட்டுக்கொள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லி சட்னி (தாளிக்காமல்) அல்லது சாம்பார். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கரு. (குறிப்பு: கோதுமை மாவு அரைக்கும்போது, ஒரு கிலோ கோதுமைக்கு 100 கிராம் சோயா சேர்த்து அரைப்பது நல்லது.)

 முற்பகலில், வெண்ணெய் எடுத்த மோர் ஒரு கிளாஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸ் அல்லது இளநீர் அல்லது காய்கறி சூப் ஒரு பவுல்.
 மதிய உணவுக்கு, அவரவர் கை அளவுக்கு நான்கு கைப்பிடி அளவு சாதம். பூசணி, பீர்க்கை, புடலை, சுரைக்காய், காலிஃப்ளவர்  ஏதாவது காய்கறி கூட்டு. ஏதேனும் ஒரு கீரை.

 பிற்பகலில் லோ கிளைசமிக் இண்டெக்ஸ்’ கொண்ட சோயா, ராஜ்மா, சிறிய கறுப்பு கொண்டைக்கடலை  இவற்றில் ஏதாவது ஒரு சுண்டல்  2 கைப்பிடி அல்லது வறுத்த சோயாபீன்ஸ் 2 கைப்பிடி.
 இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கு முன், காளான், காய்கறி அல்லது தக்காளி சூப் 2 பவுல். ஒரு மணி நேரம் கழித்து, பப்பாளி, ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம். அதனுடன், காய்கறிகள் சேர்த்த சாலட் ஒரு பவுல்.

உடற்பயிற்சி:
 தினமும் 25 நிமிடம் யோகப்பயிற்சி, கூடவே மூச்சுப்பயிற்சியும் முக்கியம். அதுமட்டுமின்றி, பொதுவாக எப்போதுமே நிற்கும்போதும், நடக்கும்போதும் பேசும்போதும் வயிற்றை உள்ளிழுத்தபடியே இருந்து பழகவேண்டும். அதுவே ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதனால் வயிற்றுத் தசைகள் டோன்’ ஆகி, தொப்பை குறையும்.

Related

நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்!

நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலர...

குளிர்கால டிப்ஸ்...!

குளிர்கால டிப்ஸ் தலைபாரம், தலைவலி நீங்க... தலையில் நீர் கோப்பதனாலும், ஜல தோஷத்தின் தொடக்க நிலையிலும் தலைவலி, தலைபாரம் வந்து பாடாய்ப்படுத்தும். அந்த மாதிரி நேரங்களில், தலை மட்டும் வலித்தால் ...

கால் வெடிப்புப் போக என்ன செய்ய வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன தீர்வு?”கன்சல்டிங் ரூம்!

கன்சல்டிங் ரூம் - எஸ்.ரம்யா, தேனி “எனக்கு 36 வயது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று எந்த பிரச்னையும் இல்லை. பாதங்களில் வெடிப்பு அதிகமாக இருக்கிறது. எனது சேலை, மாட்டி இழுக்கும் அளவுக்கு வெடி...

Post a Comment

2 comments

Mathesh T Martalli said...

How to increase the weight

MohamedAli said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தாங்கள் கோரிய விபரம் விரைவில் தொகுத்தளிக்கின்றேன். பெட்டகம் A.S.முஹம்மது அலி.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 10:26:13 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,222

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item