பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க... !
பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க... நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற...

பொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க...
1.கற்றாழை ஜெல் அல்லது சாற்றை உங்களுடைய தலையின் தோலில் நேரடியாகத் தடவி, மென்மையாக மசாஜ் செய்து விடவும். குளிப்பதற்கு முன்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த ஜெல் உங்களுடைய தலையில் இருக்க வேண்டும். இந்த வழிமுறைiயில் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 முறையாக, 15 நாட்களுக்கு செய்து வந்தால், பொடுகுகள் காணவே காணோம்!! சொரசொரப்பான, எரிச்சல் மிகுந்த சருமங்களுக்கு இந்த குளிர்ச்சியான கற்றாழை ஜெல் மிகவும் உகந்ததாகும்.
2.சிறிதளவு வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் வெந்தயத்தை வெளியிலெடுத்து அரைக்கவும். அரைக்கப்பட்ட வெந்தயத்துடன், கற்றாழை சாற்றை சேர்த்து உங்களுடைய தலையில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையற்ற எண்ணைய் மற்றும் பூஞ்சைகளின் பிடியிலிருந்து விடுபட முடியும். இந்த வழிமுறையில் உடனடியாக பலன் கிடைக்காதெனினும், சில நாட்களுக்குப் பின்னர் பலன் வெளியெ தெரியும்.
3.கற்றாழை ஜெல்லுடன், யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து பசையாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பசையை உங்களுடைய தலையில் தடவி விட்டு, மசாஜ் செய்யவும். இந்த பசையை உங்களுடைய தலையில் சுமார் 1 மணிநேரத்திற்கு வைத்திருந்து விட்டு, சாதாரண தண்ணீரில் முடியை அலசவும். இந்த இயற்கையான மூலிகைகளில் கலந்துள்ள குணப்படுத்தும் காரணிகள், உங்களுடைய தலைமுடியையும் சுத்தம் செய்கின்றன. இந்த வழிமுறையை கடைப்பிடிப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தத் தேவையில்லை.
4.புதிதாக எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு தன்னிச்சையாகவே பொடுகுகளிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குணமுடையதாகும். எனவே, பொடுகு விஷயத்தில் மிகவும் பலனுள்ளதாக எலுமிச்சை சாறு உள்ளது. பாதியளவு எலுமிச்சையை அறுத்து, அதன் சாற்றை காற்றாழை ஜெல்லுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஸ்கால்ப்பில் தடவி விட்டு, 1 மணிநேரம் பொறுத்திருங்கள். அதன் பிறகு தலைமுடியை அலசி விட்டு, மென்மையான ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
5.ஷாம்பு போடுவதற்கு முன்னதாக, கற்றாழை சாற்றை தடவிக் கொள்வது பொடுகுகளை தலைமுடியிலிருந்து அழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழையில் உள்ள இயற்கையான பொருட்கள் இறந்த செல்களை நீக்கவும் திறமையாக நீக்கவும், தலைமுடியை போதுமான அளவு ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும், சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கவும் மற்றும் மீண்டும் பொடுகுகள் வராமல் தடுக்கவும் கற்றாழை உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கற்றாழையை நன்றாக தலையில் தடவி விட்டு, 10 நிமிட நேரத்திற்கு காத்திருப்பது மட்டுமே. இதற்குப் பின்னர், ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
6.அரை கோப்பை கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டு, அதனுடன் 2 தேக்கரண்டி தேங்காண்ணெயையும், 2 தேக்கரண்டி வெந்தயத் பொடியையும் மற்றும் துளசி பொடியையும் கலந்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலக்கிக் கொண்டு, தலைமுடி முழுமையாக மூடும் வகையில் போட்டுக் கொள்ளவும். ஷவர்-கேப் போட்டுக் கொண்டு, படுக்கையில் உறங்கச் செல்லவும். காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீரும், சிறதளவு ஷாம்புவும் போட்டு நன்றாக கழுவி இந்த கலவையை நீக்கி விடவும். இந்த ஊட்டசத்து மற்றும் சிகிச்சையளிக்கும் குணமுடைய கலவை ஒரே நாளில் உங்களுடைய தலைமுடியை சுத்தம் செய்திடும். முடியை கண்டிஷனிங் செய்வதிலும், பொடுகுகளை விரட்டுவதிலும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இது மிகவும் பயனள்ளதாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த வழிமுறையை பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
2 comments
கற்றாழைச் சாறு எடுப்பது எப்படி என்ற தகவல் தந்தால் உபயோகமாக இருக்கும்.
அன்பிற்கினிய அய்யா, பழனி கந்தசாமி அவர்களுக்கு அறிய தரும் தகவல். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment