சப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்? சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்!
ஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் தகுந்த உப்புடன...

சப்பாத்தி மாவு பிசையும்போது கிட்டத்தட்ட 15 நிமிடமாவது நன்கு அடித்துப் பிசைய வேண்டும். மஹாராஷ்ட்ராவில் வெறும் ரேஷன் கோதுமை மாவில் உப்பும் நிறைய தண்ணீர் மட்டும் சேர்த்து ஒரு கட்டையால் அடிப்பார்கள், நிறைய நீர் சேர்த்து கையால் பிசைவது இயலாது என்பதால். அடிக்க அடிக்க நீரெல்லாம் குறைந்து மாவு மிருதுவாக திரண்டு வரும்.
குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வையுங்கள். சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். தீ சிறிது அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும். ஒரு துணியை வைத்துக் கொண்டு இரு பக்கங்களும் press செய்தால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும். அல்லது நல்ல தீயில் 2 வினாடிகள் இரு பக்கங்களையும் போட்டெடுத்து, பிறகு ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு நேரடியான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்தால் சப்பாத்தி மிக மிக மெதுவாக இருக்கும்.
Post a Comment