இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும்
எண்ணெய் குடிக்காத சில்லி காலிஃப்ளவர்! சந்தேகங்களும்... தீர்வுகளும் ஃபுட்ஸ் 'ச மையல் சூப்பர்!...

https://pettagum.blogspot.com/2013/07/blog-post_2829.html
எண்ணெய் குடிக்காத சில்லி காலிஃப்ளவர்!
சந்தேகங்களும்... தீர்வுகளும்
ஃபுட்ஸ்
'சமையல்
சூப்பர்!’ - குடும்பத்தினரிடமிருந்தோ, விருந்தினரிடமிருந்தோ இந்த
வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் போதும்... அதுவரை சமையலறை
புழுக்கத்தில் வியர்க்க விறுவிறுக்க உழைத்து பட்ட சிரமங்கள் எல்லாம்
மறைந்து, பஞ்சு மேகத்தில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றும்
இல்லத்தரசிகளுக்கு. இந்த உணர்வை நிரந்தமாக்கும் வகையில், உங்கள் சமையல்
சிறப்பாக அமைவதற்கும், சமைக்கும்போது ஏற்படும் சந்தேகங்களைக் களைவதற்கும்
சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் யோசனைகள் கூறும் பகுதி இது. இந்த இதழில்
உங்களுக்கு உறுதுணை புரிபவர் சுபா தியாகராஜன்.
ரஸ்க் தூளில் ஒரு டீஸ்பூன் மைதா மாவைக் கலந்து, பின்னர்
கட்லெட்டைப் புரட்டி எண்ணெயில் போட்டால், தூள் எண்ணெயில் உதிர்ந்து
கருகாமல் இருக்கும்.
வித்தியாசமான பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி?
கடைகளில் விற்கும் பக்கோடாக்களை வாங்கி, அதில்
இருக்கும் பெரிய துண்டுகளை எடுத்து பருப்பு உருண்டைக் குழம்புக் கலவையில்
போட்டுத் தயார் செய்தால், வித்தியாசமான பக்கோடா உருண்டைக் குழம்பு ரெடி!
சில்லி காலிஃப்ளவர், எண்ணெய் குடிக்காமல் இருக்க உபாயம் தாருங்களேன்...
பூக்களை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து
(அரைவேக்காடாக), சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு
சேர்த்துப் பிசிறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... எண்ணெய்
குடிக்காத சில்லி காலி ஃப்ளவர் தயார்.
பாசிப்பருப்பு பாயசம் கூடுதலாகவும், ருசியாகவும் இருக்க என்ன வழி?
பாசிப்பருப்புடன் சிறிது பச்சரிசியையும் வாசம் வரும்வரை
வறுத்து வேக வைக்கலாம். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை சேர்த்தால்,
கூடுதல் ருசி தரும்.
பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து செய்யும்போது காய்கறி கலவையில் நிறம் இறங்காமல் இருக்க என்ன செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை தனியாக சிறிது
நேரம் நன்றாக வதக்கி, பிறகு மற்ற காய்களுடன் சேர்த்து வேக வைத்தால் நிறம்
இறங்காது.
அழகர்கோவில் தோசை சூப்பராக செய்யும் முறை என்ன?
புழுங்கலரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரிக்கு
சரியாக எடுத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து... மிளகு, இஞ்சி, காய்ந்த
மிளகாயை அரைத்து மாவில் கலந்து, தேவையான பச்சரிசி மாவு, உப்பு போட்டுக்
கலந்து ஊறவிட்டு, மறுநாள் காலையில் நெய் விட்டு தோசை
வார்த்தெடுத்தால், சுவையான அழகர்கோவில் தோசை ரெடி.
பனீரை வீட்டிலேயே எப்படி செய் வது... எப்படி பயன்படுத்துவது?
தேவையான பாலைக் காய்ச்சி, நன்கு கொதித்தவுடன் அதில்
தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து திரிக்கவும். திரிந்த பாலை சுத்த மான
பருத்தி துணியில் வடிகட்டினால் கொஞ்சம் கெட்டியான, மிருதுவான பனீர்
கிடைக்கும். அதை சப்பாத்தி பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டி, ஃப்ரிட்ஜில்
வைத்து தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்தோ, அல்லது அப்படியே
உதிர்த்தோ ரெசிபிகளில் சேர்க் கலாம். இதை 3 நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து
உபயோகிக்கலாம்.
சாதத்தில் போட்டு சாப்பிட திடீர் பொடி ரெசிபி..?
சிறிதளவு பொட்டுக்கடலையுடன், வறுத்த பாசிப்பயறு, பூண்டு
2 பல், காய்ந்த மிளகாய் ஒன்று, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு
சுற்று சுற்றி எடுத்தால்... மணம் வீசும் பொடி தயார். சாதத்தில் நெய் (அ)
நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்...
சூப்பரோ சூப்பர்தான்!
மேக்ரோனி, சேமியா போன்றவை உதிரியாக வர என்ன செய்யலாம்?
அளவை விட, அதிக நீரில் உப்பு, சிறிது எண்ணெய் விட்டுக்
கொதிக்க வைத்து, அதில் சேமியா (அ) மேக்ரோனியை போட்டு முக்கால் பதமாக
வெந்தவுடன் எடுத்து வடிகட்டி, குளிர்நீரில் அலசினால் உதிரியாக, ஒட்டாமல்
வரும்.
Post a Comment