பப்பாளி பர்பி' ---- சமையல் குறிப்புகள்,
இது, " பப்பாளி பர்பி ' செய்முறை நேரம்! தேவையானவை: பப்பாளி பழம்-2, பால்-2 டம்ளர், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு-12, ஏலக்காய்த் ...
தேவையானவை: பப்பாளி பழம்-2, பால்-2 டம்ளர், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு-12, ஏலக்காய்த் தூள் 1டீஸ்பூன், சர்க்கரை- 1கிலோ, நெய்-அரை கப்.
செய்முறை: பப்பாளிப் பழங்களின் தோல், விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, பழத்துண்டுகளை வதக்கி அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, பால் கோவா தயார் செய்து, அரைத்த பப்பாளி விழுதுடன் கலந்து பிசையவும். கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கலவையை சேர்த்துக் கிளறவும். நன்றாக வாசனை வந்ததும், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சி, பதமாக வந்ததும், பப்பாளி கலவையைப் போட்டு கிளறவும். பர்பி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் போட்டுப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
பப்பாளி பர்பி பாலைக் காய்ச்சி, கோவா தயாரிக்க நேரமில்லையென்றால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு, மில்க் மெய்டு சேர்த்து செய்யலாம்.
2 comments
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன...
எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்
Very Very Thanks By Pettagum A.S. Mohamed Ali
Post a Comment