ரவா லட்டு ரெசிபி! --- சமையல் குறிப்புகள்,
ரவா லட்டு ரெசிபி! தேவையானவை : ரவை - ஒரு டம்ளர், தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை - அரை டம்ளர், நெய் - 5 ஸ்பூன், அர...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_9.html
ரவா லட்டு ரெசிபி!
தேவையானவை: ரவை - ஒரு டம்ளர்,
தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை - அரை டம்ளர், நெய் - 5
ஸ்பூன், அரை டம்ளர் சர்க்கரைப்பாகு காய்ச்சத் தேவையான தண்ணீர்.
செய்முறை: வாணலியில் 2 ஸ்பூன்
நெய்விட்டு சூடு செய்து, ரவையை பச்சை வாசனை போகுமளவு வறுத்தெடுக்கவும்.
பிறகு, 2 ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துருவலை வதக்கவும். தொடர்ந்து
சர்க்கரையை பாகு காய்ச்சவும். கடைசியாக ரவையையும், தேங்காய் துருவலையும்
சர்க்கரைப்பாகுடன் கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால்
ஒரு ஸ்பூன் நெய் மேலாக விடவும். ரவா லட்டு ரெடி! ச்சோ... சிம்பிள் இல்ல!
Post a Comment