பச்சைப் பட்டாணி கத்லி -- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: பச்சைப் பட்டாணி - 2 கப், சர்க்கரை - இரண்டரை கப், முந்திரிப் பருப்பு - 20, பால் - அரை கப், சர்க்க...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_8833.html
தேவையானவை: பச்சைப் பட்டாணி - 2 கப்,
சர்க்கரை - இரண்டரை கப், முந்திரிப் பருப்பு - 20, பால் - அரை கப்,
சர்க்கரை போடாத கோவா - அரை கப், ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை, நெய் -
ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பட்டாணியை வேக
வைத்து, ஆறியதும் மிக்ஸியில் கூழாக அரைக்கவும். முந்திரிப் பருப்பை பாலில்
ஊற வைத்து நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு
சிறிது தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் 2 டீஸ்பூன் பால் விட்டு
கொதிக்கவிடவும். சர்க்கரையின் அழுக்கு திரண்டு வரும். அதை நீக்கி விட்டு,
பிசுக்கு பதத்தில் பாகு வந்ததும் பச்சைப் பட்டாணி விழுது - முந்திரி
விழுது சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியானதும் சர்க்கரை போடாத கோவா
சேர்த்து, ஜாதிக்காய் பொடி தூவி சுருள கிளறவும். பிறகு, நெய் விட்டு
கிளறி, பாத் திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி
வில்லைகள் போடவும்.
பச்சை நிறத்தில் பார்க்க அழகாக இருப்பதுடன், சாப்பிட மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த கத்லி.
..
பச்சைப் பட்டாணி கத்லி: பட்டாணியை நெய்யில் வதக்கி வேகவைத்து அரைத்தால், பச்சை வாசனை மிகவும் குறைந்துவிடும். குங்குமப்பூ சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்.
Post a Comment