மொச்சக்கா சாறு -- சமையல் குறிப்புகள்,
மொச்சக்கா சாறு தேவையானவை: பச்சை மொச்சை - 2 கப், பூண்டு - 4 பல், விரளி மஞ்சள் - ஒன்று, சின்ன வெங்காயம் - 4, புளி - சிறிய எலுமிச்சை அ...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_321.html
மொச்சக்கா சாறு
தேவையானவை: பச்சை மொச்சை - 2 கப்,
பூண்டு - 4 பல், விரளி மஞ்சள் - ஒன்று, சின்ன வெங்காயம் - 4, புளி - சிறிய
எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, அரிசி - தலா ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: பச்சை மொச்சையை, கிள்ளு
பதமாக வேக வைத்து, நீரை வடிக்கவும். புளியை ஊற வைத்து, கெட்டியாக அரை கப்
அளவு கரைத்து வைக்கவும். கடுகு, அரிசியை மிளகாய் வற்றலுடன் சேர்த்து ஊற
வைத்து மையாக அரைக்கவும். பூண்டை சிறிய குச்சியில் குத்தி, நேரடி தணலில்
சுட்டு எடுக்கவும். ஆறியதும் தோலை உரிக்கவும். விரளி மஞ்சளையும் நேரடி
தணலில் சுடவும். அரை கப் மொச்சையை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் சேர்த்து
வதக்கவும். புளித் தண்ணீர், வேக வைத்த மொச்சை, பூண்டு, அரைத்த மொச்சை,
அரைத்த கடுகு விழுது, உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும். சுட்ட மஞ்சளை
ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்கவும். மொச்சை வேக வைத்த தண்ணீரையும்
சேர்க்கவும். தளதளவென கொதித்து வரும் போது அடுப்பை அணைத்து, கறிவேப்பிலை
சேர்த்து மூடி வைக்கவும்.
இது, கர்நாடகா மாநில உணவு வகை. சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ஏற்றது. விருப்பப்பட்டால், சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
மொச்சக்கா சாறு: பச்சை மொச்சை கிடைக்காவிட்டால், காய்ந்த மொச்சையை 8 மணி நேரம் ஊற வைத்து இதை செய்யலாம்.
Post a Comment