மிக்ஸ்டு வெஜிடபிள் அல்வா --- சமையல் குறிப்புகள்,
மிக்ஸ்டு வெஜிடபிள் அல்வா தேவையானவை: காலிஃப்ளவர் துருவல் (உப்பு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு எடுத்து ...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_577.html
மிக்ஸ்டு வெஜிடபிள் அல்வா
தேவையானவை: காலிஃப்ளவர் துருவல்
(உப்பு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு எடுத்து துருவியது) - கால்
கப், தோல் சீவி துருவிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - தலா கால்
கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - 50 கிராம், பால் - இரண்டரை கப், முந்திரி
- 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: காலிஃப்ளவர், கேரட்,
உருளைக்கிழங்கு துருவல் ஆகியவற்றுடன் பச்சைப் பட்டாணியை சேர்த்து அடி கனமான
பாத்திரத்தில் போட்டு பால் விட்டு வேகவிடவும். வெந்த காய்கறி கலவையை
கரண்டியால் மசித்து அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து மிதமான சூட்டில்
கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும். நெய்யில்
வறுத்த முந்திரி பருப்பைத் தூவி பரிமாறவும்.
Post a Comment