பாலக் ரோல் --- சமையல் குறிப்புகள்,
பாலக் ரோல் தேவையானவை: பாலக் கீரை (பெரியதான இலை) - 10, சாதம் - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் அரைத்த விழுது - ...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_12.html
பாலக் ரோல்
தேவையானவை: பாலக் கீரை (பெரியதான இலை)
- 10, சாதம் - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம்
அரைத்த விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், பச்சை மிளகாய்
(பொடியாக நறுக்கியது) - 2, வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாலக் இலைகளை நன்கு கழுவி
ஈரம் போக தனியே உலர வைக்கவும். கடுகு, எள், எண்ணெய் தவிர மற்ற பொருட்கள்
அனைத்தையும் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டி யாக கலக்கவும்.
இதிலிருந்து சிறிதளவு எடுத்து பாலக் இலை ஒன்றின் மேல் பரப்பி, அதன் மேல்
மற்றொரு இலையை வைத்து மூடவும். இதுபோல எல்லாவற்றையும் செய்யவும். மேலே
கொஞ்சம் கலவையைப் பூசி ஒவ்வொன்றையும் ரோல் செய்து ஆவியில் (இட்லித்
தட்டில்) 5 நிமிடம் வேகவிடவும் இதுதான் ரோல்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து,
வெடித்ததும் எள் சேர்த்து வறுத்து... தயாரித்து வைத்த ரோல்களைப் போட்டு,
சிறிது புரட்டி இறக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: வடஇந்தியாவில் இதை அதிகம் செய்வார்கள். இதுபோல சேம்பு இலையிலும் செய்யலாம்.
பாலக் ரோல்: கொஞ்சம் வேர்க்கடலைப் பொடி சேர்த்து செய்தால், சுவை அதிகரிக்கும்.
Post a Comment