மினி ரெசிபி! - கார்த்திகை உருண்டை!
தேவையானப் பொருட்கள்: அவல் பொரி - 4 கப், கறுப்பு எள் - 2 மேஜைக்கரண்டி, பொட்டுக்கடலை - கால் கப், வெல்லம் - ஒன்றேகால் கப், அரிசி மாவு - சிற...

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை நமுத்திருந்தால் மட்டுமே, வெறும் கடாயில் போட்டு சூடு வர வறுத்து எடுக்க வேண்டும். இல்லையென்றால், அப்படியே பயன்படுத்தலாம். வெல்லத்தை பொடித்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு, பாகு பதம் வந்ததும் இறக்குங்கள். (பாகை சிறிது எடுத்து தண்ணீரில் விட வேண்டும். பின் அதை எடுத்து உருட்டி தரையிலோ, வேறு பாத்திரத்திலோ போட்டால், சத்தம் வர வேண்டும். வெல்லப்பாகு சேர்க்கும் எல்லா உருண்டைகளுக்குமே இது தான் பாகு பதம்.) வறுத்த எள், பொட்டுக் கடலை, அவல் பொரி ஆகியவற்றை பாகில் கொட்டி, கிளறி, சூடாக இருக்கும் போதே, அரிசி மாவை, கைகளில் தடவிக் கொண்டு, உருண்டை பிடியுங்கள். கார்த்திகை பொரி உருண்டை தயார். ஜமாயுங்கள்!
Post a Comment