நாட்டுக்கோழி மிளகு குழம்பு --- சமையல் குறிப்புகள்-அசைவம்!,
இதை நாட்டுக்கோழி மிளகு குழம்பு என்று சொல்வதைவிட நாட்டுக்கோழி மிளகு ரசம் என்று சொல்வதே பொருத்தம். எங்கள் கிராமத்தில், யாரையேனும் சளிப் ப...

கொத்துமல்லித்தழை : தேவையான அளவு
முதலில், சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் வரமிளகாயை எண்ணையில் விட்டு நன்கு வதக்கவும். இந்த கலவை சூடு தணிந்து, ஆறியவுடன், தேங்காய் மற்றும் கொத்துமல்லித்தூள் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும். அதைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு, வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கடுகு சேர்த்து, வரமிளகாயை போடவும். நன்கு வறுத்து அரைத்துவைத்த மிளகுத் தூளை இதில் போடவும். பின்னர், நாட்டுக்கோழியுடன் கருவேப்பிலை சேர்த்து, வாணலியில் போட்டு வதக்கவும். இப்போது, முதலில் அரைத்து வைத்த வெங்காய தக்காளி கலவையை நாட்டுக்கோழியோடு சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் நன்றாக வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் கொத்துமல்லித் தழை சேர்த்து, நல்ல கொதி வந்தவுடன், அதில் லேசாக மிளகுத் தூளை தூவி விடவும். இதற்குப் பிறகு, ஒரு கொதி வரும்வரை வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு, பின்பு, இறக்கி பரிமாறவும்.
Post a Comment