குஷ்தபா--சமையல் குறிப்புகள்-அசைவம்!
இறைச்சி - ஒரு கிலோ நெய் - 200 கிராம் தயிர் - 100 கிராம் தனியாத் தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி ...

- இறைச்சி - ஒரு கிலோ
- நெய் - 200 கிராம்
- தயிர் - 100 கிராம்
- தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- அரரூட் மாவு - 5 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு 11
- கொத்துமல்லி - ஒரு கட்டு
- இறைச்சிகளை எலும்புகள் நீக்கி அரைத்துக்கொண்டு தனியா, மிளகாய், உப்பு, சீரகம், அரரூட் மாவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
- இறைச்சி கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாதியளவு நெய்யை வாணலியில் விட்டு இறைச்சி உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
- வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டுக் காய்ந்ததும் தயிர், சர்க்கரை, அரைத்த இஞ்சி விழுது, 3 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து வரும்போது, இறைச்சி உருண்டைகளை மெதுவாகப் போட்டுப் பதினைந்து நிமிடங்கள் மூடி வேகவிடவும்.
- பின்னர், மிகச்சிறிய தீயில் மேலும் 15 நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லியைத் தூவவும்.
Post a Comment