130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்!

130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்! வி வசாயம் பொய்த்துப் போகும் சூழ்நிலைகளில் விவ...

130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்!விவசாயம் பொய்த்துப் போகும் சூழ்நிலைகளில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். ஆடு, மாடு, கோழி... எனப்பல கால்நடைகள் இருந்தாலும், குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் தருபவை நாட்டுக்கோழிகள். அதனால்தான் விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில், நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல லாபம் எடுத்து வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

கள்ளக்குறிச்சி தாலூகாவுக்குட்பட்ட குன்னியூர் என்ற கிராமத்தில்தான், ராமச்சந்திரனின் பண்ணை உள்ளது. முழுமையாகப் பனி அகலாத ஒரு காலை வேளையில் பண்ணைக்குள் நுழைந்தோம். கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“சின்ன வயசுல இருந்தே விவசாயம் எனக்குப் பரிச்சயம். பத்தாம் வகுப்பு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். முப்பத்தி நாலு வருஷமா விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். கிணத்துப் பாசனத்துல 6 ஏக்கர் நிலம் இருக்கு. கரும்பு, நெல், கோழிக்கொண்டை, மாட்டு தீவனம்னு சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கேன்.

வீட்டுத் தேவைக்காக ரொம்ப வருஷமா நாட்டுக் கோழிகளை வளர்த்துக்கிட்டு இருந்தேன். வீட்டுத் தேவைக்குப் போக மீதி இருக்குற கோழிகளை வெளியில விற்பனை செய்வேன். அதுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்குறதைப் பார்த்த பிறகுதான் பண்ணை அமைச்சு நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். ரெண்டு வருஷத்துக்கு முன்ன தோட்டத்துல இருந்த கோழிகளைக் கழிச்சுட்டு அசில் ரகத்துல 7 கோழிகள், 2 சேவல்கள்னு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி இப்போ 160 உருப்படிகள் இருக்கு. இந்த ரக நாட்டுக்கோழிகள் வருஷத்துக்கு 100 முட்டைகள் வரை இடும்” என்று முன்னுரை கொடுத்த ராமச்சந்திரன் தொடர்ந்தார்...


“எனக்கு விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. ‘பசுமை விகடன்’ புத்தகத்துல ‘பசுமைச்சந்தை’ பகுதிக்கு எழுதிப்போட்டேன். அடுத்த வாரமே நிறைய பேர் கோழிகள் வேணும்னு கேட்டு வந்துட்டாங்க. சிவகங்கை, ஈரோடு, கன்னியாகுமரினு தூரத்து மாவட்டங்கள்ல இருந்தும் இன்னமும் தொடர்ந்து வந்துட்டுருக்காங்க. இங்க கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். பக்கத்துல தலைவாசல் பகுதியில் கோழி நோய் ஆய்வகம் இருக்குறதால, மருத்துவம் பார்க்குறதுக்குப் பிரச்னையில்லை.

காலையில 6 மணிக்குக் கொஞ்சம் கம்பைச் சாப்பிட வெச்சுட்டு மேய்ச்சலுக்குத் திறந்து விட்டுடுவோம். மதியம் ஒரு மணிக்கு அரிசி கொடுப்போம். மூணு மணிக்கு மக்காச்சோளம் கொடுப்போம். கோழிகள் இடுற முட்டைகளைச் சேகரிச்சு இன்குபேட்டர் மூலமா பொரிக்க வைக்கிறோம். இன்குபேட்டர்ல 21 நாள்கள்ல முட்டை பொரிஞ்சு குஞ்சு வெளியே வந்துடும். ஒருநாள் முழுக்க இன்குபேட்டர்லயே குஞ்சுகளை இருக்கவிட்டு அதுக்கப்பறம், ‘புரூடர்’க்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா தகரத்தைச் சுத்தி வெச்சு வெப்பத்துக்காகப் பல்புகளை எரிய விடணும்.

இந்த அமைப்புக்குப் பெயர்தான் புரூடர். புரூடர் அமைப்பைக் கூண்டுக்குள்ள அமைச்சுக்கிட்டா குஞ்சுகள் வெளியே ஓடாம இருக்கும். கூண்டுக்குள்ள தனித்தனிப் பாத்திரத்துல தீவனமும், தண்ணீரும் வெச்சுடுவோம். கோழிகளுக்கு எப்பவும் சுத்தமான தண்ணீர் கூண்டுக்குள்ள இருக்கணும். 15 நாள்கள் ஆன ஒரு குஞ்சுக்குத் தினமும் 5 கிராம்ல இருந்து 8 கிராம் வரை தீவனம் கொடுப்போம். 30 நாள்கள் ஆன குஞ்சுக்குத் தினமும் 10 கிராம்ல இருந்து 15 கிராம் வரை தீவனம் கொடுப்போம்.

இருபது நாள்கள் புரூடர்ல வெச்சுருந்துட்டு குஞ்சுகளைக் கொட்டகைக்கு மாத்திடணும். கொட்டகைக்குள்ள எப்பவும் காற்றோட்டம் இருக்கணும். கொட்டகையோட தரைப்பகுதியில நிலக்கடலைத் தோலை 2 அங்குல உயரத்துக்குப் பரப்பிவிடணும். 60 நாள்கள் கொட்டகைக்குள்ள வளர்த்த பிறகு, சேவல்கள், கோழிகளைத் தனித்தனியாகப் பிரிச்சு விற்பனை செஞ்சுடுவோம். மூணு மாசத்துக்கு மேல வளர்த்து வித்தா நல்ல விலை கிடைக்கும். நாங்க பெரும்பாலும் தாய்க்கோழிகளை விற்பனை செய்றதில்ல. குஞ்சுகளை மட்டும்தான் விற்பனை செய்றோம்” என்ற ராமச்சந்திரன், நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்போ பண்ணையில 130 அசில் ரகக் கோழிகளும், 30 சேவல்களும் இருக்கு. ஒரு குஞ்சு 50 ரூபாய்னு வாரம் 100 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்றோம். அதுமூலமா வாரம் 5,000 ரூபாய்னு மாசத்துக்கு 20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனம், மருத்துவச் செலவுனு எல்லாம் போக மாசத்துக்கு 15,000 ரூபாய் லாபம் கிடைக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு

ராமச்சந்திரன்,

செல்போன்: 90475 49354கோழிகளுக்கு மருத்துவம்

கோழிகளுக்கான கைவைத்தியம் குறித்துப் பேசிய ராமச்சந்திரன், “மஞ்சள்தூள், சீரகம், முருங்கைக் கீரை, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து அரைச்சுக் கோழிகளுக்குக் கொடுத்தா குடற்புழுக்கள் வெளியே வந்துடும். வடிச்ச கஞ்சியில மஞ்சள்தூள், சீரகத்தூள் ரெண்டையும் கலந்து கொடுத்தாலும் குடற்புழுக்கள் வெளியே வந்துடும்.

சின்ன வெங்காயத்தை இடிச்சு விளக்கெண்ணெயில கலந்து கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அப்பப்போ வசம்பைத் தண்ணீர்ல கலந்து கொடுத்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்துல அதிமதுரம்பொடியைத் தண்ணீரில் கலந்து கொடுத்தால் கோழிகளுக்குச் சளிப்பிடிக்காது” என்றார்.

கொட்டகை

கோழிகளுக்கான கொட்டகை குறித்துப் பேசிய ராமச்சந்திரன், “20 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை அமைச்சுக்கலாம். கொட்டகையைச் சுத்தி தரையில் இருந்து 1 அடிக்குச் சுவர் கட்டி, அதுக்கு மேல கம்பி வலையை இழுத்துக் கட்டிக்கலாம். மேற்கூரையைத் தென்னங்கீற்றால் அமைச்சா வெப்பம் தாக்காது” என்றார்.

Related

வேலை வாய்ப்புகள் 4863490742174490808

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item