குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாக குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா? குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாகப் படம் ஒன்று கடந்த சில நாள்கள...

குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாகப் படம் ஒன்று கடந்த சில நாள்களாக வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டிருக்கிறது. அது பழைய மெசேஜா என்கிற ஆராய்ச்சியைவிட, இதுபோன்ற ஆபத்து எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்ற பதற்றமே நம்மைப் பற்றிக்கொண்டது. காலை நேர பரபரப்பில் பருப்பு வேகவைப்பதிலிருந்து வெஜிடபிள் பிரியாணி வரை சமைக்க குக்கர் இன்றைக்கு கட்டாயம் வேண்டும். குக்கரின் நல்ல பக்கம் வேகமான சமையல் என்றால், மறுபக்கம் நீராவி அடிப்பது, மேலே போட்ட வெயிட் வீசியெறியப்பட்டு கிச்சன் முழுக்க சாதமும் பருப்பும் சிதறுவது எனச் சில இருக்கின்றன. நம் சமையல்கட்டில் ஒன்றாகிவிட்ட குக்கரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? மூத்த குடும்பத் தலைவி லஷ்மி சீனிவாசனிடமும், குக்கரால் கண்களில் காயம்பட்டுவிட்டால் உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி பற்றி கண் மருத்துவர் நிஷாந்திடமும் பேசினோம்.

லஷ்மி சீனிவாசன் (குடும்பத் தலைவி):
''அரிசியோ, பருப்போ எதுவாக இருந்தாலும் அதற்குத் தேவையான அளவான தண்ணீர் மட்டும் வையுங்கள். தண்ணீர் அதிகமாகும்போதுதான் பொங்கி வழிவது, கேஸ் ஸ்டவ்வை அணைத்து லீக்காவது எனப் பிரச்னைகளை ஏற்படுத்தும். தேவைக்கு அதிகமாக ஊற்றப்பட்ட தண்ணீர், விசில் வழியாகச் சீறிக்கொண்டு வெளியேறும்போது, உடனே கரண்டியால் விசிலின் தலைமேல் ஒரு தட்டு தட்டுவார்கள். விசில் அடங்கிவிட்டால் ஓகே. சில நேரம், சீறியடிக்கிற அந்தச் சூடான நீர் முகத்திலோ, கைகளிலோ பட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அதிகமாகத் தண்ணீரைவைத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

குக்கரில் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, வெயிட் போடவேண்டிய இடத்தில் இருக்கும் துளை மூடிக்கொண்டிருக்கிறதா என்று செக் பண்ணுங்கள். துளை மூடிக்கொண்டிருந்தால் வாயால் ஊதியோ, மெல்லியக் குச்சியால் குத்தியோ அடைப்பை நீக்கிவிட்டு பயன்படுத்துங்கள். துளை அடைப்பைக் கவனிக்காமல் வெயிட் போட்டு ஸ்டவ்வில் ஏற்றுவது ஆபத்து. விசில் மூலமாக வெளியேற வழியில்லாமல் பிரஷர், ஒரு கட்டத்தில் விசிலை தூக்கியடித்து வெடித்துச் சிதறும். சமையல்கட்டின் சீலிங் வரை சாதமும் பருப்பும் பறக்கும். பக்கத்தில் நின்றிருப்பவரின் முகம், உடலிலும் கொதிக்கும் சாதமும் பருப்பும் அபிஷேகம் செய்துவிடும் ஜாக்கிரதை.

குக்கரில் சமையல் வேலை முடித்ததும், கேஸ்கட்டை தண்ணீரில் முக்கி வைத்துவிடுங்கள், அல்லது இரவில் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். அப்போதுதான் கேஸ்கட்டில் சீக்கிரம் விரிசல் விழாது. விரிசல் விழுந்த கேஸ்கட்டை, 'லேசாகத்தான் விரிசல் விட்டிருக்கு' என்று சிலர் பயன்படுத்துவார்கள். கேஸ்கட்டில் விரிசல் இருந்தால், அதன் வழியாகச் சூடான நீராவி வெளியேறி, பக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கிற நம் கைகளில் படும்.

சில பெண்கள் குக்கரில் ரொம்ப நேரம் விசில் வரவில்லையென, கத்தி அல்லது கரண்டியால் வெயிட்டை லேசாக தூக்கிவிடுவார்கள். வெயிட் டைட்டாக இருந்தாலும் சரி, பல காலமாகப் பயன்படுத்தி லூசாக இருந்தாலும் சரி, சடாரென்று கழன்று வந்துவிட்டால் விபரீதம்தான். கொதிக்கிற தண்ணீர் படு ஃபோர்ஸாக பீய்ச்சி அடிக்கும். இதுவும் சமைக்கும் பெண்களுக்கு ஆபத்தான விஷயம்தான்.

குக்கர் விஷயத்தில் பல பெண்களும் ஒரு தவற்றை செய்கிறார்கள். அதாவது, ஒரு பிராண்டு குக்கரின் வெயிட்டை அவசரத்துக்கு இன்னொரு குக்கரில் பயன்படுத்துகிறார்கள். இது செய்யவே கூடாத தவறு. சரியாக ஃபிட்டாகாமல் வெயிட் வீசியெறியப்படலாம். அப்படி நடக்கும்போது, கண்களிலோ முகத்திலோ பட்டால் நிலைமை என்னவாகும் நினைத்துப் பாருங்கள்.
குக்கரின் பிடி லூசாக இருந்தால், அதை டைட்டாக்கிவிட்டு பயன்படுத்துங்கள். சூடாக இறக்கிவைக்கும்போது, கைப்பிடி உடைந்து விழுவதைத் தவிர்க்கலாம்.

குக்கரின் ஸ்பேர் பார்ட்ஸை தனியாக வாங்குகிறீர்கள் என்றால், அந்த பிராண்டு தயாரிப்புகளையே வாங்குங்கள். கடையில் கொடுத்து ரிப்பேர் செய்யும்போதும் இதில் கவனமாக இருங்கள்.

சில குக்கர்கள் சமைக்கும்போது வித்தியாசமாகச் சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும். இதற்கு, 'நான் பழசாகிவிட்டேன். என்னை மாற்றிவிடு' என்று அர்த்தம். எனவே, தாமதிக்காமல் புதிய குக்கர் வாங்குங்கள்.

நிஷாந்த் (கண் மருத்துவர்):
குக்கரின் நீராவி, பிரஷர் போன்றவை உங்கள் கண்களில் பட்டுவிட்டால், உடனடியாக ரன்னிங் வாட்டரில் கண்களைக் கழுவிவிட்டு, தாமதிக்காமல் கண் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். நீராவி பட்டால் ஒரு சொட்டு மருந்து, பிரஷர் பட்டால் ஒரு சொட்டு மருந்து என தனித்தனியாக மருந்துகள் இருக்கிறது. கண் பாதிப்பை வைத்து சொட்டு மருந்து பரிந்துரைக்கப்படும். அதை உடனடியாக பயன்படுத்த ஆரம்பித்தால், ஒரு வாரத்தில் கண் சரியாகிவிடும். அதைவிடுத்து, வீட்டிலேயே தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் என்று சுயவைத்தியம் செய்யாதீர்கள். இது, கண்களுக்குப் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். மற்றபடி கண்ணில் பிரஷர் குக்கரின் விசில் வந்து உட்கார்ந்து கொள்வது என்பதை நான் கேள்விபடவேயில்லைலப்படி சாத்தியமும் இல்லை என்பதுதான் என் கருத்து.

Related

கேள்வி-பதில்! சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்?

சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்? அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப் பிசைந்து தேய்க்கலாம். மாவு கையில் ஒட்டாமலிருக்க வேண்டுமானால...

சமையல் சந்தேகங்கள்--மொறுமொறு கட்லெட்டுக்கு...

மொறுமொறு கட்லெட்டுக்கு... ‘‘நான் கட்லெட் செய்யும் போதெல்லாம், எண்ணெய் ஊறியது போல் ‘சதசத’வென ஆகிவிடுகிறது. ஹோட்டல்களில் வாங்குவது போல, மேல்புறம் மொறுமொறுப்பாக இருப்பதில்லை. அந்த மாதிரி கட்லெட் வருவதற்...

சமையல் கேள்வி - பதில் பகுதி 1

சமையல் கேள்வி - பதில் விடை தருகிறார் மெனு ராணி அறுசுவை பகுதியில் பல விதமான தகவல்களுடன் உங்கள் சந்தேகங்களையும் தீர்க்கிறார். படிதது பயன் பெறுங்கள். கேள்வி: தனி மிளகாய்ப்பொடியில் வண்டு வருகிறது ஏன்? - ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Nov 26, 2024 11:12:43 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,118

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item