எலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..? ஆலோசனை!

எலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..? ஆலோசனை ச மீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்...

எலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..?
ஆலோசனைமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங் களில் பெய்த மழையின் பாதிப்பால் பல வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகியிருக்கும். மேலும் சுவரில் வழிந்த மழை ஈரத்தால் செயல்பாடு பாதிக்கப்பட்ட ஏ.சி, குளிரில் ஃப்ரீஸரில் உறைந்த ஐஸால் ஸ்டக் ஆன ஃப்ரிட்ஜ் என, பருவநிலை காரணமாகவும் எலெக்ட்ரானிக் பொருட்களில் பிரச்னைகள் ஏற்படும் சீஸன் இது. அவற்றை சர்வீஸ் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே....

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி, கிரைண்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பிரபலமான பிராண்டுகளில்தான் வாங்குவோம். அந்தப் பொருட்கள் பழுதாகும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சர்வீஸ் செய்வதே நல்லது. ஏனெனில், பழுதடைந்த பொருளில் ஏதாவது உதிரிப்பாகங்கள் வீணாகி இருந்தால், அதன் ஒரிஜினல் பாகங்களை மாற்ற கம்பெனியே வசதியாக இருக்கும். வீட்டுக்கு அருகில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடைகளில் பழுதுபார்த்தால், ஒரிஜினல் பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். 

பிராண்டட் பொருட்களைப் பொறுத்தவரை, எந்தப் பொருளை சர்வீஸ் செய்ய வேண்டுமென்றாலும் முதலில் அதை அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தெரியப்படுத்துவது நல்லது.

பிறகு, நிறுவனத்தின் சார்பாக சர்வீஸ் செய்ய வரும் நபரிடம் சாதனத்தில் என்ன பிரச்னை, அதைச் சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ளவும். மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, சாதனத்தில் உள்ள பிரச்னையைத் தெரிவித்து, அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்வது புத்திசாலித்தனம். ஏனெனில், சில நேரங்களில் சர்வீஸ் செய்ய வரும் நபர், நிறுவனம் நிர்ணயித்ததைக் காட்டிலும் அதிகத் தொகை வசூலிக்க வாய்ப்புள்ளது.

சர்வீஸ் முடிந்த பிறகு அது தொடர்பான ரசீதை வாங்கி வைத்துக்கொள்ளவும். அந்த ரசீதில், என்ன சாதனம், எந்தப் பிரச்னைக்காக சர்வீஸ் செய்யப்பட்டது, அதற்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு வாங்குவது முக்கியம்.

ரசீதில் சர்வீஸ் செய்யப்பட்ட பொருளின் சீரியல் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும், அந்த எண் சரியாக உள்ளதா என்பதையும் மறக்காமல் சரிபார்க்கவும்.


ஒருவேளை அதே சாதனத்தில் மீண்டும் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அது குறித்து புகார் அளிக்க இந்த ரசீது அவசியம்.

வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், வீட்டில் பல வேலைகள் முடங்கும் என்பதால், உடனடியாக சர்வீஸ் செய்துவிடுவது டென்ஷனைக் குறைக்கும்; சர்வீஸ் செய்யும்போது மேற்சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பது வீண் செலவைக் குறைக்கும்.

Related

உபயோகமான தகவல்கள் 5213938347067707480

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item