வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்!

வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள் உ டல் எடையைக் குறைக்க, சிலர் உணவுக் க...

வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்

டல் எடையைக் குறைக்க, சிலர் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள். சிலர், அதிக உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை வருத்திக்கொள்வர். இந்த இரண்டையும் தனித்தனியாகப் பின்பற்றினால், பலன் கிடைப்பது தாமதமாகும். ஆனால், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் பலன் விரைவில் கிடைக்கும். உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.
டிரெட் மில்


ஒரு மணி நேரத்துக்கு ஆறு கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் நடக்க ஏற்றவாறு செட்டிங்கை மாற்றி, சற்று வேகமாக நடக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் அரை மணி நேரத்தில் 350 கலோரிகள் வரை எரிக்க முடியும். டீன் ஏஜில் இருந்து டிரெட்மில் பயிற்சி செய்யலாம்.
இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் உள்ள கொழுப்பு சீராகக் குறையும்.
நுரையீரல் மற்றும் இதயச் செயல்பாடுகளைச் சீராக்கும். சி.ஓ.பி.டி., மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
உடலில் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மை அதிகரிக்கும். இதனால், வொர்க்அவுட் செய்வது எளிதாகும்.
ரோவிங்

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், அரை மணி நேரத்தில் 377 கலோரிகளை எரிக்கலாம்.
இந்தப் பயிற்சியில் வேகமாக முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டே இருப்போம் என்பதால், இடுப்புப் பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
‘கோர்’ தசைகள் வலுவடையும். இதன் மூலம், தசைகளில் எளிதில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
முழு உடலுக்கான பயிற்சி இது. எனவே, உடல் உறுதியாகும். உடல் எடை குறைப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி.
கயிற்றை நன்றாக வேகமாக இழுக்கும்போது, முன் கையில் இருக்கும் தசைகள் வலுப்பெறுகின்றன.
எலிப்டிக்கல் ட்ரெய்னர்

கை, கால் இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்துச் செய்யும் பயிற்சி இது.
அரை மணியில் சுமார் 370 கலோரிகள் வரை எரிக்க முடியும். வீட்டிலேயே இந்தக் கருவியை வைத்தும் பயிற்சி செய்யலாம்.
முழு உடலுக்கான கார்டியோ வொர்க்அவுட்களில் சிறந்த பயிற்சி இது. இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் இயங்கும்.
கைப்பிடியில் கையைப் பிடித்துக்கொண்டு, வெறுமனே கால்களால் நடக்கக் கூடாது. கைகளை நன்கு அசைக்க வேண்டும். இதன் மூலம், தோள்பட்டை நன்றாக வலுவடையும்.
‘கோர்’ தசைகள் வலுப்பெறும். மலை ஏறுவதுபோல இதில் செட்டிங் மாற்றிக்கொள்ளலாம். இதயத் தசைகள் வலுப்பெறும்.
ஸ்பின் பைக் 

கிட்டத்தட்ட சைக்கிள் ஓட்டுவதுபோன்ற பயிற்சிதான். இந்த பைக்கை நாம் ஓட்டும்போது, டிஸ்க் வடிவத்தில் ஒரு தட்டு சுற்றிக்கொண்டே இருக்கும்.
அமர்ந்த நிலையில் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
நடைப்பயிற்சிகூட செய்ய முடியாத அளவுக்கு மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் பயிற்சியைத் தாராளமாகச் செய்யலாம்.
அரை மணி நேரத்தில் அதிகபட்சம் 440 கலோரிகள் வரை எரிக்க முடியும். கால் தசைகள் வலுவாகும், மூட்டு உறுதியாகும்.
ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளவர்கள், இந்தப் பயிற்சியைச் செய்ய வலி குறையும்.
நீச்சல்

நீச்சலை ஒரு பயிற்சியாகச் செய்ய விரும்புபவர்கள், நல்ல நீர்நிலைகள் அல்லது நீச்சல் குளம் போன்றவற்றில் செய்வதே சிறந்தது.
அரை மணி நேரத்தில் சுமார் 410 கலோரிகள் வரை எரிக்க முடியும். பயிற்சி செய்த உணர்வே இருக்காது.
உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும், ஸ்டாமினா எனப்படும் உடல் உறுதித்தன்மை அதிகரிக்கும்.
இதயம் மற்றும் நுரையீரல் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். சுவாசக் கோளாறுகள் தடுக்கப்படும்.
நீச்சல் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்ய ஏற்றது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5956189391872649240

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item