பருப்புப் பொடியில் இருந்து பனீர் வரை... இது ஹோம் மேட்!

பருப்புப் பொடியில் இருந்து பனீர் வரை... இது ஹோம் மேட்! பருப்புப் பொடி தேங்காய் இட்லிப் பொடி டேட் சி...

பருப்புப் பொடியில் இருந்து பனீர் வரை...
இது ஹோம் மேட்!பருப்புப் பொடி
தேங்காய் இட்லிப் பொடி
டேட் சிரப்
ஹோம் மேட் மேத்தி பனீர்
டொமேட்டோ ப்யூரி
கன்டன்ஸ்டு மில்க்
வெஜிடபிள் ஸ்டாக்
பூண்டு ஊறுகாய்
வடுமாங்காய் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
டைகளின் அடுக்குகளில் வைத்திருக்கும் பனீர், டொமேட்டோ ப்யூரி, ஊறுகாய், சிரப் போன்றவற்றை செலக்ட் செய்து, பில் போடும் இடத்துக்குச் செல்லும்போது, ‘கையில் இருக்கிற காசு போதுமா?’, இதை எல்லாம் வீட்டுல இருக்கறவங்க விரும்பிச் சாப்பிடுவாங்களா?’ என்று சிலபல சந்தேகங்கள் மனதை அரிக்கும். இதுபோன்ற அயிட்டங்களைக் குறைந்த செலவில், நிறைவான ருசியில் வீட்டிலேயே செய்ய உதவும் வகையில், எளிதான செய்முறைகளை வழங்குகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த காயத்ரி ரமணன். இவற்றைச் செய்து பயன்படுத்தி, பர்ஸை குண்டாகவும், மனதை லேசாகவும் மெயின்டெய்ன் பண்ணுங்க!
பருப்புப் பொடி
தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்
 பொட்டுக்கடலை - கால் கப்
 காய்ந்த மிளகாய் - 6
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் -
கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 10
 நல்லெண்ணெய் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு, பின்னர் துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வறுத்து, மணம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். அவற்றுடன் பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
சூடான சாதத்தில் நெய்யுடன் இந்தப் பருப்புப் பொடி கலந்து, சுட்ட அப்பளம் தொட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும்..

தேங்காய் இட்லிப் பொடி
தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்
 உளுந்தம்பருப்பு - ஒரு கப்
 தேங்காய்த்துருவல் - ஒரு கப்,
 மல்லி (தனியா) - அரை கப்
 காய்ந்த மிளகாய்  - ஒன்றேகால் கப்
 பூண்டு - 10 பல்
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
 உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல், மல்லி (தனியா) சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிடவும்.
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, உப்புப் போட்டு நன்கு அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துப் பயன்படுத்தவும்.

டேட் சிரப்
தேவையானவை:
 கொட்டை நீக்கிய, சுத்தமான பேரீச்சை - ஒரு கப்
 தண்ணீர் - ஒன்றரை கப்
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதித்ததும் பேரீச்சையை அதில் சேர்த்து சுமார் 45 நிமிடம் வேகவிடவும். பேரீச்சை நன்கு மிருதுத்தன்மை பெற்றதும் இறக்கி, ஒரு பாத்திரத்தில் சுத்தமான காட்டன் துணியை விரித்து வேகவைத்ததை வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிப்பிடித்து விடாமல் கிளறிவிடவும். 15 நிமிடம் கழித்து பேரீச்சைச் சாறு சிறிது கெட்டிப்பட்டு நுரைத்துக்கொண்டு வரும். அப்போது அடுப்பில் இருந்து இறக்கி காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில்
வைத்துப் பயன்படுத்தவும். இதை வீட்டில் தயாரிக்கும் ஜூஸ்களில் கலந்து கொடுக்கலாம்.

ஹோம் மேட் மேத்தி பனீர்
தேவையானவை:
 பால் - 4 கப்
 தயிர் - அரை கப்
 கஸூரி மேத்தி (மலர்ந்த வெந்தயக் கீரை) - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பாலை நன்கு கொதிக்கவைத்து, கஸூரி மேத்தி இலை சேர்த்துக் கலக்கி, தயிர் சேர்த்து மேலும் கலக்கவும். பால் உடனே திரிந்துவிடும். பால் திரியவில்லை என்றால், இன்னும் சிறிது தயிர் சேர்த்துத் திரியவிடவும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் காட்டன் துணியை விரித்து, திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும். திரிந்த கெட்டியான பகுதி துணியில் தங்கி, அதில் இருக்கும் தண்ணீர் பாத்திரத்தில் வடிந்துவிடும். இனி, அந்தத் துணியை ஒரு வட்டமான பாத்திரத்தில் வைத்து, அதன் மீது கனமான பொருளை வைத்து 45 நிமிடம் `செட்’ ஆகவிடவும். இதுதான் பனீர் இதை துணியில் இருந்து எடுத்து விரும்பும் வடிவில் வெட்டி, ஒரு டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு:
வடிகட்டி வைத்திருக்கும் திரிந்த பால் தண்ணீரை, சப்பாத்தி மாவு பிசையப் பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

டொமேட்டோ ப்யூரி
தேவையானவை:
 தக்காளி  - 12
 வினிகர் - 2 டீஸ்பூன்
 தண்ணீர்  - தேவையான அளவு
செய்முறை:
பழுத்த தக்காளிகளைக் கழுவிக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வேகவிடவும். தக்காளியின் தோலில் வெடிப்பு ஏற்பட்டதும் அடுப்பில் இருந்து இறக்கி, தண்ணீரை வடித்துவிடவும். டேப் தண்ணீரில் தக்காளியை 2 நிமிடம் கழுவி தோலை உரித்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்து, வினிகர் கலந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் வைத்துப் பரிமாறவும். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

கன்டன்ஸ்டு மில்க்
தேவையானவை:
 பால் பவுடர்  - அரை கப்
 சர்க்கரை - கால் கப்
 கொதிக்க வைத்த தண்ணீர் - கால் கப்
 உப்பு சேர்க்காத வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சர்க்கரை, கொதிக்க வைத்த தண்ணீர், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் வண்ணம் நன்றாக அடித்துக் கலந்துகொள்ளவும் (மிக்ஸியில் போட்டும் அடித்துக்கொள்ளலாம்.) இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து, ஸ்வீட் செய்யும் நேரத்தில் ரெடிமேட் கண்டன்ஸ்டு மில்க் போல பயன்படுத்தலாம்.

வெஜிடபிள் ஸ்டாக்
தேவையானவை:
 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 செலரி, கேரட் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 2 பல் (நசுக்கவும்)
 பார்ஸ்லி இலை - சிறிதளவு
 பிரிஞ்சி இலை - ஒன்று
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு  டீஸ்பூன்
 தண்ணீர் - 8 கப்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் ஆலிவ் ஆயில் ஊற்றி,் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் செலரி மற்றும் கேரட் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி... பூண்டு, பார்ஸ்லி இலை, பிரிஞ்சி இலை, மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, சோயாசாஸ் ஊற்றி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு மணி நேரம் வேகவிடவும். பிறகு, காய்கறிகளின் எசன்ஸ் தண்ணீரில் இறங்கி சூப் பதத்துக்கு வந்ததும், காய்கறிகளை வடிகட்டி எடுத்துவிட்டு, தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். இதனை சூப், ரசம், நான் வெஜ் கிரேவி போன்றவற்றுக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

பூண்டு ஊறுகாய்
தேவையானவை:
 பெரிய பூண்டு  - 50 பல்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு  - 3 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம் பருப்பு - தலா
2  டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் - தலா அரை டீஸ்பூன் (எண்ணெய் ஊற்றாமல் சிவக்க வறுத்து அரைத்துக்கொள்ளவும்)
 வெல்லம் - சிறிதளவு,
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, அதில் தோல் உரித்த பூண்டு சேர்த்து, கருகிடாமல் மிதமான தீயில் பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கிக்கொள்ளவும். அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி... எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி இறக்கி, ஒரு மணி நேரம் ஆறவிடவும். கலவையுடன் பூண்டு நன்கு ஊறவேண்டும். (பொதுவாக நான்கு நாட்கள் இதற்கு தேவைப்படும்) பின்னர் ஒரு சுத்தமான பாத்திரத்தில் இதை எடுத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
தயிர் சாதம் மற்றும் வெரைட்டி ரைஸுக்கு ஏற்ற மிகச்சிறந்த சைட் டிஷ் இது.

வடுமாங்காய் ஊறுகாய்
தேவையானவை:
 கடுகு -  2 டீஸ்பூன்
 வெந்தயம் - 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 25 (அ) காரத்திற்கேற்ப
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 வடுமாங்காய்  - அரை கிலோ
 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி, ஈரம் போக துடைத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாங்காய்களைப் போட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்துகொள்ளவும். பெரிய வடுமாங்காய்களாக இருந்தால், காம்புப்பகுதியில் கீறி விடவும். அப்போதுதான் நாம் ஊற்றும் சாறு மாங்காயின் உள்ளே இறங்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நிறம் மாறும் வரை வறுத்து ஆறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கலவையை எண்ணெய் தடவிய மாங்காயுடன் கலந்து 10 நாட்கள் ஊறவிட்டு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
குறிப்பு:
ஒவ்வொரு முறை மாங்காயை எடுக்கும் போதும் கையில் நீர் இல்லாமல் சுத்தமாக எடுத்தால் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

எலுமிச்சை ஊறுகாய்
தேவையானவை:
 பெரிய எலுமிச்சைப் பழம் - 4
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - 3 டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
 கடுகு - 2 டீஸ்பூன்
 உளுந்து - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன் (எண்ணைய் ஊற்றாமல் வெந்தயத்தை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
எலுமிச்சைப் பழங்களை நன்கு கழுவித் துடைத்து, ஒரு பழத்தை எட்டு துண்டுகள் வீதம் அனைத்துப் பழங்களையும் நறுக்கி, விதைகள் நீக்கிக்கொள்ளவும். ஒரு சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில் நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி ஒரு வாரம் ஊறவிடவும். பூஞ்சையைத் தவிர்க்க, ஊறவைத்த எலுமிச்சையை தினமும் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். ஒரு வாரத்தில் எலுமிச்சை, உப்பில் நன்கு ஊறியிருக்கும். பிறகு,  வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து இதனுடன் ஊறவைத்த எலுமிச்சையைச் சேர்த்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி இறக்கி, சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

Related

பொடி வகைகள் 4459453668098842752

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item