இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!!

  இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!!   கோமாரி நோய்க்கு: வெந்தயம், சீரகம் தலா 1...

 

இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை
திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!!
 
கோமாரி நோய்க்கு:
வெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும்.
இவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும்.
இவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும்.
இந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும்.
இந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும்.
இதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் 100% கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
 
கால் புண்:
-----------------
காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மிலி.
நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும்.
மருத்தைத் தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும்.
கால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.
இந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு,
திரு.புண்ணியமூர்த்தி
9842455833.
தொகுப்பு,
நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.
கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்!!!!
 
கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா.வீ.கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன.
 
நஞ்சுக்கொடி:
***********
மாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப்பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும்.
பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.
 
சில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக்காமல் இருப்பர். இது அறிவியல் ரீதியாக உண்மையல்ல. மாறாக கன்றினை 30நிமிடத்திற்கள் பால் குடிக்க விடுவதால் ஈன்ற மாடுகளின் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பை சுருங்கி விரியும். இதனால் நஞ்சுக்கொடி தானாகவே விழும் வாய்ப்புள்ளது.
 
சிலர் தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக அதை ஒரு குச்சியைக்கொண்டு சுற்றி இழுப்பார்கள் அல்லது அதில் ஒரு கல்லைக் கட்டி விடுவர். இவ்வாறு செய்வதால் நஞ்சுக்கொடியானது முழுமையாக பிரிந்து வராமல் மாட்டிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பகுதி மட்டும் அறுந்து விழுந்துவிடும். மீதம் உள்ள பகுதி கருப்பையின் உள்ளேயே தங்கி நோயை உருவாக்கும்.
 
அடுத்து கன்று ஈன்றவுடன் மாடுகளுக்கு மூங்கில் இலை அல்லது வெண்டைக்காய் அல்லது சந்தனம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. மூங்கில் இலை மற்றும் வெண்டைக்காயில் கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளது. இது கருப்பையைச் சுருங்கி விரியச் செய்வதால் நஞ்சுக்கொடி தானாகவே பிரிந்து விழ வாய்ப்புள்ளது.
 
நஞ்சுக்கொடி தங்கியுள்ள மாடுகளில் காணப்படும் அறிகுறிகள்:
கன்று ஈன்று 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி தங்கியிருக்கும் மாடுகளில் காய்ச்சல், சோர்வு, தீவனம் உண்ணாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
 
கன்று ஈன்ற 24 மணி நேரம் கழிந்த பின் நஞ்சுக்கொடி அழுக ஆரம்பித்து துர்நாற்றம் அடிக்கும்.
அறையின் வெளிப்புறத்தில் ஈக்கள் மொய்க்கும்.
பால் உற்பத்தி குறைந்து விடும்.
சிவப்பான நீரைப்போன்ற திரவம் மிக அதிக அளவில் துர்நாற்றத்துடன் காணப்படும்.
இது ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து விட்டதைக் குற
ிக்கும்.
நஞ்சுக்கொடி தொங்கிக் கொண்டிருக்கும்போது மாடு கீழே படுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.
நஞ்சுக்கொடிதானே என நினைத்து தகுதியற்றவர்களைக் கொண்டு எடுக்க முற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கருப்பையில் உள்ள முடிச்சுகளை முறையாகப் பிரித்து எடுக்காமல் நஞ்சுக்கொடியை வெறுமனே பிடித்து இழுப்பார்கள். இதனால், கருப்பை முடிச்சுகள் அறுந்து ரத்தக் கசிவு ஏற்படும்.
 
கருப்பை வெளித்தள்ளுதல்:
**************************
கருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது. கருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும்.
 
இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.
இந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது.
இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.
 
முதலுதவி சிகிச்சைகள் :
*****************:******
வெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு.
மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம். மருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.
 
அதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.
தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.
 
கையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.
 
மாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.
நோய்குறியீடு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்:
இக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம். 
 
நிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் 3 அல்லது 4 பகுதியாகப் பிரித்து அளிக்க வேண்டும்.
தொழுவத்தில் மாடுகள் நிற்கும் இடம் முன்னோக்குச் சரிவு கொண்டதாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
 
தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்போம் முகநூல் குழு.
Premnath Desi Cow Farm:
பஞ்சகவ்யா! - 18
தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்!
ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பயிர்களுக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கும் உகந்தது பஞ்சகவ்யா என்பதையும் பல முன்னோடி விவசாயிகள் நிரூபணம் செய்துள்ளனர். அந்த வகையில் கால்நடை வளர்ப்பில் பஞ்சகவ்யாவின் பங்களிப்புக் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இளம் விவசாயி நந்தகுமார்.
 
நந்தகுமாரின் தோட்டத்துக்கு நாம் சென்றபோது, களத்துமேட்டில் கட்டப்பட்டிருந்த நாட்டு மாடுகளுக்கு மூங்கில் குழாய் மூலம் பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்தார், அவர். நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், நந்தகுமார். 
 
“நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். இங்க 25 நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். இந்த மாடுகள் மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்... பொருட்களைப் பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். பயிர்களுக்குக் கொடுத்தது போக, மீதம் இருக்குற பஞ்சகவ்யாவை விற்பனையும் செய்றேன். இப்போ, நாட்டுப் பசும்பாலுக்குத் தேவை அதிகமாயிட்டே வருது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகள்ல ஒரு லிட்டர் பால் சுமார் 100 ரூபாய் வரை விற்பனையாகுது. எங்கிட்ட இப்போதைக்கு 7 நாட்டு மாடுகள்தான் கறவையில இருக்கு. எங்க தேவை போக மீதியை விற்பனை செய்றேன். தினமும் 20 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை செஞ்சிட்டிருக்கேன். ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு விற்பனை செய்றேன். இதன்படி தினமும், 1,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மாசத்துக்கு பால் மூலமா 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. பால் உற்பத்தி அதிகரிச்சு, நேரடியா பாலை விற்பனை பண்ணும்போது, இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயத்துல நல்ல வருமானம் கிடைக்கிறதாலதான், சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை விட்டுட்டு இங்க வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த நந்தகுமார் தொடர்ந்தார்.
 
“மாடுகள் அதிகமா இருக்குறதால ஒண்ணு மாத்தி ஒண்ணுக்கு ஏதாவது வியாதி வந்துடும். ஆனா, நான் மாடுகளுக்கு அலோபதி மருந்துகளை உபயோகப்படுத்துறதில்லை. மாடுகளுக்கு முழுக்க முழுக்க பஞ்சகவ்யா வைத்தியம்தான். கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு சொல்லிக் கொடுத்தவர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன் ஐயாதான். அவரோட ஆலோசனைப்படிதான் மாடுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து வருமுன் காக்கும் வைத்தியம் செஞ்சுக்குறோம். 50 மில்லி வடிகட்டிய பஞ்சகவ்யாவை தண்ணீர் கலக்காமல் கன்னுக்குட்டிகளுக்கு மாசம் ஒரு வாட்டி கொடுக்கிறோம். இதனால, நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது. கன்னுக்குட்டிகள் மண்ணைத் தின்னு வயிறு உப்பிப் போய் மூச்சுவிட சிரமப்படுற சமயத்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை மூணு நாளைக்குக் கொடுத்தா சரியாகிடும். 
 
மேய்ச்சலுக்குப் போற நாட்டு மாடுகள் சில சமயங்கள்ல இளம் சோளப்பயிர்களைத் தின்னுடுச்சுன்னா ‘சொக்கிப் போயிடும்’. இதனால வயிறு உப்பி, எந்திரிக்க முடியாமப் போயிடும். இதுக்கு உடனே வைத்தியம் பார்க்காட்டி மாடு செத்துப் போயிடும். 500 மில்லி பஞ்சகவ்யாவை மூங்கில் குழாய்ல நிரப்பி நேரடியா தொண்டைக்குள் போகுற மாதிரி ஊத்தி விடணும். ரெண்டு மணிநேரம் கழிச்சு மறுபடியும் அதே அளவு பஞ்சகவ்யாவை வாயில ஊத்திவிட்டு, ஒரு மணி நேரம் வரைக்கும் தீவனம் கொடுக்காம மரத்தடியில தனியா கட்டி வெச்சா... கொஞ்ச நேரத்துல வயித்துப் பொருமல் நீங்கி, மாடு அசைபோட ஆரம்பிச்சுடும். சாணம், சிறுநீர் ரெண்டும் முழுசா வெளியேறிடும். அப்புறமா அந்த மாட்டுக்குத் தண்ணீர் காட்டணும். நல்லா தண்ணி குடிச்சுட்டுப் பசுந்தீவனத்தைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுத்துட்டு வந்தா, சொக்கிப் போன மாடு முழுசா குணமடைஞ்சிடும்” என்ற நந்தகுமார்,                                                        
 நிறைவாக
“கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை மாதிரியான உலர்தீவனம் ரொம்ப அவசியம். இதை மொத்தமா கிடைக்கிறப்போ வாங்கிப் போர் போட்டுக்குவோம். அப்படிப் போர் போடுறப்போ, வரிசையா கத்தைகளை அடுக்கி, அது மேல 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேப்பிலையில முக்கி நல்லா தெளிச்சு விடுவோம். இதேமாதிரி ஒவ்வொரு அடுக்குக்கும் செஞ்சுவிட்டா உலர்தீவனத்துல சுவை கூடிடும். சத்தானதாகவும் மாறிடும்.
அதேமாதிரி மடிவீக்கம் கண்ட பசுக்களுக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கொடுத்து... மடிகள்லயும் பூசி விடுவோம். இதுமாதிரி ரெண்டு மாசம் காலையிலயும் சாயங்காலமும் செஞ்சா மடிவீக்கம் குணமாகிடும். கன்னுக்குட்டியா இருந்தாலும் சரி, வளர்ந்த மாடா இருந்தாலும் சரி, அதுக்கு குடற்புழு நீக்கம் அவசியம். கன்னுக்குட்டிகளுக்கு அதிகாலை நேரத்துல வெறும் வயித்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை தொடர்ந்து மூணு நாளைக்குக் கொடுத்தா குடற்புழுக்கள் வெளியேறிடும். மாடுகளோட வயசுக்கேத்த மாதிரி பஞ்சகவ்யா அளவைக் கூட்டிக்கலாம் இதேமாதிரி
கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் பஞ்சகவ்யாவை வடிகட்டியே கொடுக்க வேண்டும்” என்ற எச்சரிக்கை சொல்லிவிட்டுக் கன்றுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பித்தார்.
தொடர்புக்கு, நந்தகுமார், செல்போன்: 96980 57805
 
“மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
பசுமை விகடன் வாசகர்கள் பலர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொண்டு பஞ்சகவ்யா குறித்த பல சந்தேகங்களைக் கேட்டு வருகிறார்கள். டாக்டர் நடராஜனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றில் சில இங்கே இடம்பெறுகின்றன. 
 
“கோ சஞ்சீவி என்பது என்ன... அது எதற்குப் பயன்படுகிறது?”
ஆர்.செண்பகவல்லி, கோவில்பட்டி.
“கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் மூலிகைப் பொடி, கோ சஞ்சீவி. இதை எளிதாக நாமே தயாரித்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.
அமுக்கிரா கிழங்கு, உசிலை இலை (அரப்பு இலை), வேப்பிலை ஆகியவற்றில் தலா 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். சீந்தில் இலை கொடி, நிலவேம்புச் செடி ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இந்த ஐந்து பொருட்களையும் மூன்று நாட்கள் நிழலில் காயவைத்து... உரலில் இடித்து நன்றாகப் பொடியாக்கினால், அதுதான் கோ சஞ்சீவி. இதில் 50 கிராம் பொடியை ஆடு மாடுகள் குடிக்கும் தண்ணீர் அல்லது தீவனத்தில் கலந்து கொடுத்து வந்தால், பருவத்தில் சினைப்பிடிக்கும். நன்றாகத் தீவனம் எடுக்கும். பிறக்கும் கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிகப் பால் சுரக்கும்.” 
 
“வளர்ப்பு மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
மு.சக்கரபாணி, பாமணி, நாகப்பட்டினம்.
“தாராளமாக கொடுக்கலாம். சாணத்துடன் கூடிய பஞ்சகவ்யாவை மீன் குட்டையில் போட்டுவர, நீர்த் தாவரங்களும், புழு, பூச்சிகளும் அதிகமாக உருவாகும். அது மீன்களுக்கு ஊட்டமான உணவாக மாறும். குளத்தில் புதிதாகத் தண்ணீர் விடும்போது சாணம் கலந்த பஞ்சகவ்யா ஊற்றுவது நல்லது. இடைப் பருவத்தில் மீன் குட்டையில் பஞ்சகவ்யா கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.”
தொடர்புக்கு, டாக்டர் நடராஜன், செல்போன்: 94433 58379.
பரிசோதனைகள் தொடரும்!
 
கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யா கொடுப்பது குறித்துப் பேசிய டாக்டர் நடராஜன், “நானும், கால்நடை மருத்துவர் ஆறுமுகமும் சேர்ந்து ஆடு, மாடு, கோழி, நாய்னு பஞ்சகவ்யா கொடுத்துச் சோதனைகள் செஞ்சோம். சோதனைகளைச் செய்யச் சொன்னவர், நம்மாழ்வார் அய்யாதான். அந்தச் சோதனைகள்ல நல்ல தீர்வு கிடைச்சது. கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவை மேல்பூச்சா பூசும்போது தோல் உண்ணி தொல்லையும் நீங்குச்சு. முடி உதிர்வது குறைஞ்சு தோல் பளபளப்பா மாறுச்சு.
ரொம்ப நாள் சினைப்பிடிக்காம இருந்த பசுமாடுகளுக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை தினமும் கொடுத்தப்போ, மூணு மாசத்துல சினைக்குத் தயாரானது. இதுமாதிரி இன்னும் நிறைய சோதனைகள் செஞ்சுதான் கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவைப் பரிந்துரைச்சோம். இன்னமும் சோதனைகள் தொடர்ந்துட்டுதான் இருக்கு” என்றார்.
 
கழிச்சலைத் தடுக்கும் பஞ்சகவ்யா!
சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம்.
“டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவ தயாரிக்கிற, பயன்படுத்துற முறைகள சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயிலு, காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்கள்ல 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எமன். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாப் பரவ ஆரம்பிச்சுடும். இதைச் சரியா கவனிக்காட்டி கோழிகளைக் காப்பாத்த முடியாது. முறையா பஞ்சகவ்யா கொடுக்குற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குறதில்லை. வெயில் காலங்கள்ல கோழிகள் தண்ணீர் அதிகமா குடிக்கும். அதனால குடிநீர்லயே பஞ்சகவ்யாவைக் கலந்து வெச்சுடணும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வெச்சுடணும். குறிப்பா பருவம் மாறுற காலங்கள்லயே இதைத் தொடர்ந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டா, கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசல்ல நனைச்சு, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால எதிர்ப்புச் சக்தி அதிகரிச்சு எந்த நோயும் வர்றதில்லை” என்றார்.
தொடர்புக்கு: சீனு, செல்போன்: 85268 54774

 



Related

கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் 8594484416540233847

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item