நீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?”
‘‘பால் மாடுகள் வளர்த்து வருகிறோம். மாட்டின் பாலில் புரதச்சத்துக் குறைவாக உள்ளது என்று சொல்கிறார்கள். இதைச் சரி செய்ய வழி சொல்லுங்கள்?’’ ...

கே.உமாதேவி, பண்ணைப்பட்டி.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதல்வர் முனைவர் ஆ.துரைசாமி பதில் சொல்கிறார்.
“பாலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், பாலின் விலை குறைந்துவிடும். எனவே, கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள தீவனங்களைக் கொடுக்க வேண்டும். பாலில் புரதச்சத்து குறைவாக உள்ளது என்பதை, விவசாயிகள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். பால் கறக்கும்போது, நுரை வருகிறதா என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
பாலில் எஸ்.என்.எஃப் என்று சொல்லப்படும் கொழுப்பு தவிர, பிற சத்துகளின் அளவு குறைவாக இருந்தால், தாதுஉப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். சிலர் இதைத் தீவனத்தொட்டியில் கொட்டிவிடுகிறார்கள். அது தவறு. அப்படிச் செய்யும்போது, தொட்டியின் அடியில் சென்று தங்கிவிடுவதால், மாடுகளுக்குக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காது.
இதைத் தவிர்க்க தீவனத்துடன் தாதுஉப்புக்களை நன்றாகப் பிசைந்து, அதனுடன் 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். இந்தத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே பாலில் மாற்றம் தெரியும். இந்தத் தீவனமுறை தொடர்ந்து பின்பற்றினால், பாலில் புரதச்சத்து அதிகரிப்பதுடன் மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.”
Post a Comment