முருங்கைப்பூ முட்டை பொரியல்
முருங்கைப்பூ முட்டை பொரியல் முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு முட்டை - ஒன்று சின்ன வெங்காயம் - 15 பச்சை மிளகாய் ...
https://pettagum.blogspot.com/2018/02/blog-post.html
முருங்கைப்பூ முட்டை பொரியல்

- முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில்
எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய கறிவேப்பிலைச்
சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம்
நன்கு வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக
வைக்கவும்.
முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.
நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.
இதை நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து கர்ப்பிணிப் பெண்களுக்கு செய்து தருவார்கள்.
மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும்.
Post a Comment