வீட்டு உபயோகத் துணுக்குகள்!
வீட்டு உபயோகத் துணுக்குகள் • முருங்கைக்காயை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் காய்ந்துவிடும். அதைத் தாளில் சுற்றி வைத்தால் பசு...

வீட்டு உபயோகத் துணுக்குகள்
• வீட்டு உபயோகத்துக்கு பிளாஸ்டிக் வாளிகளை வாங்குவதை விட, அலுமினிய வாளிகளை வாங்கினால் எளிதில் உடையாது. பழசானாலும் எடைக்கு போட்டு மாற்றுப் பொருள் வாங்கலாம்.
• குளிர்சாதனப் பெட்டியில் சில கரித்துண்டுகளைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் மறையும்.
• குளியலறையில் பற்பசை, சோப்பு போன்றவற்றை திறந்து வைத்தால் கிருமித்தொற்று ஏற்படும். எலி, பல்லி சிறுநீர் அதில்பட்டு நோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவே, சோம்பேறித்தனம் படாமல் அவற்றை மூடிவைக்க வேண்டும்.
• திருமண விருந்துகளின்போது வைக்கப்படும் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்திய பிறகு மீதம் இருந்தால் உடன் எடுத்து வரவும். வீடு செல்லும் வரை தாகத்துக்கு உதவியாக இருக்கும். எச்சில் இலையுடன் தண்ணீர் பாட்டிலையும் குப்பையில் போடும் பழக்கத்தைத் தவிருங்கள்.
• கொலுசு திருகாணியில் சிறிது பெவிக்கால் தடவி திருகிவிட்டால் கழறாமல் இருக்கும்.
• ஆடுதொடா இலை, நொச்சி இலை, வேப்ப இலை ஆகியவற்றை காய வைத்து பொடியாக்கி, சாம்பிராணியுடன் கலந்து தினமும் புகை போட்டால் கொசுக்களே இருக்காது.
• ரயில் பயணம் செல்லும்போது தோசை, ஊத்தப்பம் போன்றவற்றை லேசாகத் தண்ணீர் தடவி பிறகு "பேக்' செய்தால் வறண்டு போகாமல் மிருதுவாகவே இருக்கும்.
Post a Comment